நிராகரிக்கப்பட்ட கண்ணதாசன் பாடல்.. சைலண்டா வந்து ஓவர்டேக் செய்த வாலி.. கவிஞரின் ரியாக்ஷன் எப்படி இருந்திருக்கும்?..
தமிழ் திரையுலகில் தன் கவிதைகளாலும் கட்டுரைகளாலும் பலபேரை கட்டிப் போட்டு வைத்திருந்தவர் கவிஞர் கண்ணதாசன். தமிழக அரசவைக் கவிஞராகவும் விளங்கினார். புதினம், நாவல், சிறுகதை, என அனைத்திலும் புலமை பெற்றவராக விளங்கினார் கண்ணதாசன்.
தென்றல் என்ற பத்திரிக்கையையும் நடத்தி வந்தார். இப்படி தமிழ் மேல் உள்ள பற்றால் தன் வாழ்க்கை முழுவதையும் தமிழுக்கே ஒப்படைத்தவர் கவிஞர். ஏராளமான சினிமா படங்களுக்கு தன் பாடல்கள் மூலம் ஒளி கொடுத்தவர் கண்ணதாசன். முக்கியமான எம்ஜிஆரின் விரும்பத்தகு கவிஞராகவும் விளங்கினார்.
ஒரு சமயம் பச்சைவிளக்கு என்ற படத்திற்காக பாடல்கள் எழுத கண்ணதாசனுக்கு அழைப்பு வந்தது.சிவாஜி நடிப்பில் வெளிவந்த பச்சைவிளக்கு என்ற படத்தை பீம்சிங் இயக்க வேல் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்திருந்தது. படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். கதையின் கருவை கூறிய பீம்சிங் அதற்கேற்றாற் போல பல்லவியை கண்ணதாசனை பாடச் சொன்னார்.
கவிஞரும் அதற்கேற்றாற் போல பல்லவியை பாட பீம்சிங்கிற்கு பிடிக்க தயாரிப்பாளர்களும் வந்து அவர்களும் கேட்க அவர்களுக்கு பிடித்துப் போய் விட்டதாம். உடனே தயாரிப்பாளர்களான ராமா அரங்கனல், ஹசன்ஹான் போன்றோர் ஏவிஎம் மெய்யப்பச்செட்டியாரின்ஆலோசனைப் படியே நடந்து கொள்பவர்கள். உடனே மெய்யப்பச்செட்டியாரும் வந்து பல்லவியை கேட்கட்டும், அதன் பின் பாடல் காட்சியை பதிவு செய்யலாம் என்று சொல்லியிருக்கின்றனர்.
மெய்யப்பச்செட்டியார் வந்து கேட்க அவருக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம். இதை கேட்டதும் கண்ணதாசனுக்கு ஆச்சரியம். இருந்தாலும் வேறு பல்லவியை போடு என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம். உடனே வேறொரு பல்லவியை போட்டு பாடல்காட்சியை படமாக்கியிருக்கின்றனர். அதன் பின் வீட்டுக்கு போனதும் கண்ணதாசனுக்கு தான் போட்ட முதல் பல்லவிதான் முனுமுனுத்துக் கொண்டே இருந்தாராம்.
அந்த அளவுக்கு கண்ணதாசனுக்கும் மிகவும் பிடித்துப் போயிருக்கிறது. சிலகாலம் கழித்து வேறொரு படத்தின் பாடலுக்காக கண்ணதாசன் தயாராக அதே எம்.எஸ்.வி தான். உடனே எம்.எஸ்.வியிடன் கண்ணதாசன் ‘பச்சைவிளக்கு படத்திற்காக ஒரு டியூன் போட்டீர்களே அதை போடுங்கள், அந்த பல்லவியை பயன்படுத்திக் கொள்வோம்’ என்று கூறியிருக்கிறார்.
ஆனால் எம்.எஸ்.வி ‘ஆண்டவனே அந்த ட்யூனுக்கு ஏற்கெனவே வாலி வேறொரு பல்லவியை போட்டு பாடலை படமாக்கி விட்டார்கள்’ என்று கூறியதும் சற்று முகத்தை பார்த்தவர் அப்படியா எங்கே அந்த பல்லவியை பாடு என்று எம்.எஸ்.வியிடம் கேட்க அவரும் பாடியிருக்கிறார். அதைக் கேட்டதும் கண்ணதாசன் ‘வாலி எவ்ளோ அருமையாக பல்லவியை போட்டுருக்கானே’ என்று மிகவும் பெருமிதத்தோடு சொல்லி பாராட்டியிருக்கிறார் கண்ணதாசன்.