1963-ஆம் ஆண்டு திருலோக சந்தர் இயக்கத்தில் வெளிவந்த படம் நானும் ஒரு பெண். இந்தப் படத்தை ஏவிஎம் நிறுவனம்தான் தயாரித்து வெளியிட்டது. இந்தப் படத்தில் எஸ் எஸ் ராஜேந்திரன் விஜயகுமாரி முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தனர். அவர்களுடன் ரங்காராவ், எம்.ஆர் ராதா, எஸ்.வி சுப்பையா, ராஜன் போன்ற முக்கியமான நடிகர்களும் நடித்திருந்தனர்.
இந்தப் படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை சுதர்சனம் அவரால் இசையமைக்கப்பட்டது. ஏவிஎம் நிறுவனத்தின் துணைகொண்டு முருகன் பிரதர்ஸ் தான் இந்த படத்தை தயாரித்தார்கள். பாடல்களுக்கான வரிகளை கண்ணதாசன் பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் எழுதினார்கள்.
மூன்று மொழிகளில் வெளியான படம்
இந்தப் படம் மூன்று மொழிகளில் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்றது. மேலும் வணிக ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்ற படமாக நானும் ஒரு பெண் திரைப்படம் அமைந்தது. தமிழில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதையும் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதையும் இந்த படம் பெற்று தந்தது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் இந்தப் படத்திற்கு உயிர்நாடியாக அமைந்த பாடல் கண்ணா கருமை நிறக் கண்ணா என்ற பாடல் தான். அந்தப் பாடலை இப்போது கேட்டாலும் இன்றைய தலைமுறையினர் கூட வியந்து பார்க்கும் அளவிற்கு அந்தப் பாடல் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும் .அதிலும் விஜயகுமாரியின் அந்த நேர்த்தியான நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
ஹிந்தி படத்தின் இன்ஸ்பிரேஷன்
இந்தப் பாட்டு ரெக்கார்டிங் சமயத்தில் ஏவிஎம் குமரன் செங்கல்வராயனை அழைத்துக் கொண்டு ஒரு ரெக்கார்டிங் தியேட்டருக்கு போனாராம் .அங்கு ஹிந்தி படமான சாந்தாராம் என்ற படத்தில் அமைந்த ஒரு பாடலை போட்டு காட்டி இருக்கிறார் .அதை கேட்டதும் ஏவிஎம் குமரன் “இதே பீலிங் உடன் இந்த படத்திற்கான பாடலும் அமைய வேண்டும் “என கூறினாராம். சுதர்சனம் மாஸ்டரின் உதவியாளர் தான் இந்த செங்கல்வராயன்.
உடனே சுதர்சனத்திடம் குமரன் “டியூன் எப்படி வரவேண்டும் என செங்கல்வராயனிடம் சொல்லி இருக்கிறேன் .அதேபோல் தான் இருக்க வேண்டும்” எனக் கூறிவிட்டு டியூன் போட சொன்னாராம். உடனே சுதர்சனமும் செங்கல்வராயனும் டியூன் போட்டு காட்ட அவர் நினைத்தபடியே அந்தப் பாடலுக்கான டியூன் அமைந்துவிட்டது. அதன் பிறகு கண்ணதாசனை அழைத்து இந்த டியூனுக்கு ஏற்றபடி எனக்கு வரிகளை எழுதி தாருங்கள் என கேட்டு இருக்கிறார்.
உடனே கண்ணதாசன் “அது எப்படி முடியும்? முதலில் வரிகளை எழுதிய பிறகு அல்லவா டியூன் போட முடியும் .நீங்கள் டியூன் போட்ட பிறகு என்னை வரிகளை எழுதச் சொன்னால் எப்படி எழுதுவேன்?” என விவாதம் பண்ணினாராம். ஆனாலும் ஏவிஎம் குமரன் தடால் அடியாக சொல்லிவிட்டாராம் எனக்கு இந்த டியூனுக்கு ஏற்றார் போல தான் வரிகள் வேண்டும் என கண்ணதாசனை நிர்பந்தப்படுத்தி இருக்கிறார். வேறு வழி இல்லாமல் கண்ணதாசன் எழுதிய அந்தப் பாடல் வரிகள் தான் கண்ணா கருமை நிறக் கண்ணா. அது எப்பேர்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரியும். இந்த செய்தியை ஏவிஎம் குமரன் ஒரு பேட்டியில் கூறினார்.
Biggbboss Tamil:…
VijayTV: விஜய்…
Rashmika: புஷ்பா…
இயக்குனர் ஷங்கர்…
எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக…