தன்னை நடுத்தெருவில் நிறுத்திய சந்திரபாபுவுக்கு கண்ணதாசன் செய்த உதவி!. அட பெரிய மனசுதான்..

தமிழ் சினிமா தனது பாடல்களின் மூலம் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் கண்ணதாசன். இவரின் பாடல்கள் அந்த காலம் முதல் இந்த காலம் வரையிலும் அனைத்து மக்களாலும் கவரப்பட்டது. பாமர மக்களுக்கும் புரியும் வகையில் இவரின் பாடல்கள் அமைந்திருந்தன.
இவரை போலவே தனது காமெடிகளில் மூலம் மக்களை கவர்ந்தவர் நடிகர் சந்திரபாபு. இவரின் காமெடிகள் மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே, புத்தியுள்ள மனிதரெல்லாம் போன்ற பல பாடல்களின் மூலம் தன்னை ஒரு சிறந்த பாடகராகவும் வெளிக்காட்டினார்.
இதையும் வாசிங்க:எப்பா இது உலகமகா நடிப்புடா சாமி! நடக்காதுனு தெரிஞ்சு சொல்றது எவ்ளோ புத்திசாலித்தனம் – விஜயை விளாசும் தயாரிப்பாளர்
இவருக்கும் கண்ணதாசனுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. சந்திரபாபுவை வைத்து கண்ணதாசன் தனது முதல் திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால் அதனால் கண்ணதாசன் பெரிய நஷ்டத்தையே சந்தித்ததாகவும் மேலும் அந்த நஷ்டத்தை சரிகட்டவே கண்ணதாசனுக்கு பல காலம் ஆனது எனவும் பல பேட்டிகளில் சமூக ஊடகவியலாளர்கள் பேசியிருந்தனர்.
இப்படியான பல விஷயங்கள் நடந்ததால் கண்ணதாசனுக்கும் சந்திரபாபுவுக்கும் இடையே நல்ல ஒரு உறவு இல்லை என பல கருத்துகள் உலாவின. ஆனால் கண்ணதாசன் சந்திரபாபுவுக்காக பல உதவிகளையும் செய்துள்ளதாக சந்திரபாபுவின் சொந்த அண்ணன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிங்க:அந்த பாடல் வரிகளை நான் பாட முடியாது.. அடம் பிடித்த இளையராஜா.. கடைசியில் அந்த பாட்டு ஹிட்டாம்..!
சந்திரபாபு நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் இருந்துள்ளார். அப்படி இவர் இயக்கிய திரைப்படங்களில் ஒன்றுதான் தட்டுங்கள் திறக்கப்படும். இப்படத்தின் இறுதிகாட்சியில் 5 வயது குழந்தை தனது தந்தையை துப்பாக்கியால் சுடுமாறு காட்சி இருந்ததாம். ஆனால் அந்த காட்சி சென்சாரில் நீக்கப்பட்டுவிட்டதாம். ஆனால் அந்த காட்சிதான் கதைக்கு மிகவும் முக்கியமான விஷயமாம்.
அப்போது சந்திரபாபு அந்த பிரச்சினையை கண்ணதாசனிடம் கூற கண்ணதாசன் சென்சார் போர்டிடம் சென்று மிகவும் கெஞ்சியுள்ளார். ஆனால் சென்சார் அதிகாரிகள் அதற்கு சம்மதிக்கவில்லையாம். இருந்தாலும் கண்ணதாசன் பேசி அப்படத்தை ஓட வைத்துள்ளார். அதன்படி அக்குழந்தை துப்பாக்கியால் சுடுவதை நமக்கு காட்டாமல் கதாநாயகியை மட்டும் காட்டி அப்படத்தை முடித்துள்ளனர். இவ்வாறு கண்ணதாசன் தன்னால் இயன்ற உதவியை சந்திரபாபுவிற்காக செய்தாராம்.
இதையும் வாசிங்க:சினிமாவில் செய்த தவறால் மனைவியின் தாலியை விற்ற டி.ஆர்.மகாலிங்கம்!.. அட கொடுமையே!..