தான் எழுதாத பாடலுக்காக வருத்தப்பட்ட கண்ணதாசன்!.. அப்படி என்ன இருந்தது அந்தப் பாடலில் தெரியுமா?..
தமிழ் புலமை மிக்கவர்களில் கவிஞர் கண்ணதாசன் ஒரு குறிப்பிடத்தகுத்த இடத்தில் இருக்கிறார். தமிழில் புகுந்து விளையாடியிருப்பார் கவிஞர். இலக்கியம், புதினம், நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என அனைத்திலும் இவரின் ஆளுமையை வியந்து பாராட்டதவர்களே இல்லை.
அந்த அளவுக்கு தன் தமிழ் புலமையால் சினிமாவையும் ஆட்டிப் படைத்தார் கவிஞர். மற்றவர்களின் கஷ்டத்தை தன்னுடைய கஷ்டம் என கருதி அதை தன் பாட்டின் மூலம் வெளிப்படுத்துவார். தன்னுடைய அனுபவங்களையும் சேர்த்தே பாடலாக வடிவமைப்பார். தேசிய கீதம் ஒன்று மட்டுமே கவிஞர் எழுதாத ஒரு பாடல் என்று வாலி சொல்லுமளவிற்கு பெருமைக்குரியவர் கவிஞர்.
அந்த அளவுக்கு எல்லா விதமான பாடல்களையும் எழுதியவர் கண்ணதாசன். ஆனால் இவ்ளோ பாடல்களை எழுதிய கண்ணதாசன் ஒரு சமயம் தான் எழுதாத பாடலுக்காக மிகவும் வருத்தப்பட்ட சம்பவம் நடந்திருக்கிறது. ஒரு சமயம் காரில் உளுந்தூர் பேட்டை ரோட்டுக் கடையில் சாப்பிட சென்றிருக்கிறார் தன்னுடைய உதவியாளர்களுடன்.
அப்போது அந்தக் கடையில் ஒரு பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதை கேட்டவாறே கவிஞர் சாப்பிட்டு வெளியே வரும்போது நின்று முழுபாடலையும் கேட்டாராம். அதன் பின் காரில் ஏறி வரும் போது அந்தப் பாடலை பற்றி பேசினாராம். அதாவது அந்தப் பாடல் ‘மலரை பறித்தாய் தலையில் வைத்தாய், மனதை பறித்து எங்கோ வைத்தாய்’ இது தான். இதை எழுதிய கவிஞர் சினிமாவிற்கு புதியவராக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்,
அதான் இப்படி வரிகளை போட்டு எழுதியிருக்கிறார். ஆனால் இந்தப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளரின் விருப்பத்திற்கேற்பவே இந்தக் கவிஞர் பாடல் வரிகளை எழுதியிருக்க வேண்டும். இந்தப் பாடலில் தலைவன் அப்படி கேட்கும் போது உடனே தலைவி ‘மனதை கொடுத்து மலரை பறித்தேன் ’ இலவசமாக கொடுக்கவில்லை என்று தானே எழுதியிருக்க வேண்டும். அப்படி எழுதியிருந்தால் அந்தக் கவிஞரின் புலமை இன்னும் பரவலாக பேசப்பட்டிருக்கும்.
நானும் முதலில் இப்படித்தான் இருந்தேன், அதன் பின் சினிமாவின் நுணுக்கங்களை கற்றுக் கொண்ட பிறகு தான் என்னால் முழு ஆளுமையுடன் எழுத முடிந்தது என்று கூறினாராம் கவிஞர். இதன் மூலம் கவிஞரின் குணம் வெளிப்படுகிறது. அதாவது மற்றக் கவிஞர்களை போட்டியாக நினைக்காமல் அவர்களும் ஒரு நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என்ற எண்ணம் மிகவும் மெய்சிலிர்க்க வைக்கிறது.