கண்ணதாசன் சொன்னது அப்படியே பழிச்சது!.. கோபம் தலைக்கேற வாலி பண்ண காரியம்..
எத்தனையோ கவிஞர்கள் வந்த் போயிருந்தாலும் இன்றும் என்றும் நம் நினைவுக்கு வந்து போகிற கவிஞரகளாக விளங்குபவர்கள் கண்ணதாசனும் வாலியும் தான். திரைத்துறையில் இருவரும் கொடிகட்டி பறந்தவர். தொழில்துறையில் இவர்களுக்குள் போட்டி இருந்தாலும் அது நாகரீகமான போட்டியாகவே இருந்து வந்திருக்கிறது.
ஆனால் இருவரும் ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்வர். வாலியின் பல கவிதைகளை கண்ணதாசன் பாராட்டி கூறியிருக்கிறார். இருவரின் பாட்டும் மெட்டும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஒரு சமயம் ஏதோ ஒரு படத்திற்காக கண்ணதாசன் பாட்டு எழுதிவிட்டு எதற்கும் சரி பார்த்து விடுங்கள். ஏனெனில் இதே மாதிரி வாலி எழுதினாலும் எழுதியிருப்பான் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : “என் பேச்சை கேட்காம இப்படி செஞ்சிட்டான் சார்”… தயாரிப்பாளரிடம் விஜய்யை நினைத்து அழுது புலம்பிய எஸ்.ஏ.சி…
அந்த வகையில் இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்தும் கொண்டிருக்கின்றனர். பெரும்பாலும் எம்ஜிஆர் படங்களுக்கு வாலி தான் பாடல் எழுதுவார். கண்ணதாசன் வரிகளில் சிவாஜி உட்பட பல நடிகர்களின் படங்கள் வெளியாகும். கண்ணதாசனுக்கு தனிச் சிறப்புகள் இருக்கின்றது.
அவர் சம்பந்தபட்ட அனைத்திலும் ‘க ’ என்ற எழுத்து சிறப்பு பெரும். அந்த எழுத்தில் முதல் பாடல், முதல் இலக்கியம், அவர் கலந்து கொண்ட முதல் அரசியல் கூட்டம் என அனைத்தும் ‘க’ என்ற எழுத்திலே சிறப்பு பெரும். ஆனால் வாலிக்கு அப்படி எதும் இல்லை. ஆனால் வாலி இசைஞானம் அறிந்த ஒரு கவிஞராக விளங்கினார்.
இதையும் படிங்க : தன்னை அவமதிப்பவர்களை எம்ஜிஆர் எப்படி பழிவாங்குவார் தெரியுமா?.. ஆத்தாடி இது வேறலெவல்!…
இப்படி கவிதையிலும் இரு துருவங்களாக இருந்த கண்ணதாசன் வாலிக்கு இடையே ஒரு சம்பவம் அரங்கேறியிருக்கிறது. ஒரு சமயம் கண்ணதாசன் வாலியிடம் ‘ நான் இறந்து போனால் என் மரணத்திற்கு நீ தான் கவிதை வாசிக்க வேண்டும் ’என்று கூறினாராம். அவர் சொன்ன மாதிரியே அப்படியே பழிச்சிடுச்சு என்று வாலி சொன்னார்.
அவர் இறந்து 10 வது நாள் ஒரு இரங்கற் கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அதற்கு வாலி தான் கவிதை வாசிக்க வேண்டும் என சொல்லியிருக்கிறார்கள். வாலிக்கு ஒரு பக்கம் வருத்தம் இருந்தாலும் வியப்பாகவும் இருந்திருக்கிறது. மனுஷன் நினைச்ச மாதிரியே என்னை கவிதை பாட வைத்து விட்டாரே என்று ஆழ்ந்த துயரத்தில் மன விரக்தியிலும் கவிதை சொல்லியிருக்கிறார்.
அதில் ஒரு வரி இதோ : “எழுத படிக்கத் தெரியாத எத்தனையோ பேர்களில் எமனும் ஒருவன்.. அழகிய கவிதை புத்தகத்தை கிழித்துப் போட்டுவிட்டான்”