கண்ணதாசனுக்கு இப்படிஒரு காதல் கதையா?.. காதலியை நினைத்து உருகி எழுதிய பாடல் எதுனு தெரியுமா?..
தமிழ் சினிமாவில் இலக்கியம், புதினம், கவிதை , கட்டுரை ஆகியவற்றில் மாபெரும் மேதையாக இருந்தவர் கவிஞர் கண்ணதாசன். பல ஏராளமான படைப்புகளை சினிமாவிற்காக படைத்திருக்கிறார். தமிழக அரசவைக் கவிஞராகவும் இருந்திருக்கிறார். எம்ஜிஆர், சிவாஜி என அனைத்து நடிகர்களின் படங்களுக்கும் இவர் அதிகமான பாடல்களை எழுதியுள்ளார்.
வாழ்க்கை பற்றிய தத்துவங்களை உண்மைகளை இவரை தவிர வேறு யாராலும் அந்த அளவு எளிதாக சொல்லிவிட முடியாது. இவர் முதன் முதலில் “கன்னியின் காதலி” என்ற படத்தில் தனது முதல் பாடலை எழுதினார். இவர் எழுதிய தத்துவ பாடல்கள் காலத்தால் அழியாதவை.
இதனாலேயே இவர் அனைவராலும் அதிகம் கொண்டாடப்படுகின்ற சிறந்த கவிஞராக போற்றப்படுகின்றார். இத்தனை பெருமைமிக்க கவிஞர் வாழ்க்கையிலும் ஒரு சோகமான காதல் கதை குடிகொண்டிருக்கின்றது என்று சொன்னால் நம்பமுடியாது. ஆனால் அது தான் உண்மை.
இவர் இளமைக் காலத்தில் ஒரு பெண்ணை உயிருக்குயிராக காதலித்திருக்கிறார்.ஆனால் அந்த காதல் கைகூடவில்லை. அதற்கு காரணம் ஒன்று அந்த பெண் கவிஞரை விட ஒரு வயது மூப்பு. மற்றொரு காரணம் கவிஞருக்கு முன்னாடி ஒரு அண்ணன் மற்றும் அக்காள் திருமணமாகாமல் இருந்திருக்கின்றனர்.
இப்படி இருக்கும் போது எப்படி அந்தக் காதல் கைகூடும். தங்கக் கட்டிகளை ஏற்றி வந்த 4 கப்பல்கள் கடலில் மூழ்கினாலும் அந்த வலியை விட காதல் கைகூட வில்லை என்ற வலியை தன்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்று கண்ணதாசன் வருந்தியதாக இந்த பதிவை கூறிய சித்ரா லட்சுமணன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது சில நாள்கள் கழித்து அந்த பெண்ணை மீண்டும் பார்த்தாராம் கண்ணதாசன். அப்போது
அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகிவிட்டதாம். ஆனால் அந்தப் பெண்ணின் உருவம் சற்று மாறியிருந்ததாம். அப்போது தான் அவர் மனதில் ஒரு அழகான பாடல் வரிகள் உதித்திருக்கிறது.
இதையும் படிங்க : என்னடா பண்ணி வச்சிருக்க- ஆமீர்கான் முன்னிலையில் ரஜினி பட இயக்குனரை திட்டிய பாரதிராஜா?…
என்ன பாடல் தெரியுமா? ‘பாவாடை தாவாணியில் பார்த்த உருவமா இது?’ என்ற பாடல் சிவாஜியின் நடிப்பில் வெளியான ‘ நிச்சய தாம்பூலம்’ என்ற படத்திற்காக அந்த பெண்ணை நினைத்து எழுதியிருக்கிறார் கவிஞர்.