சந்திரபாபுவால் கண்ணதாசனுக்கு ஏற்பட்ட வேதனை!.. பொறுமை இழந்து கவிஞர் பண்ண காரியம்!..
அந்த கால சினிமாவில் நடிகர்கள் மத்தியில் கண்ணதாசன் மீது மரியாதையும் மதிப்பும் அளவில்லாத அன்பும் இருந்து வந்தது. கவிதைகள் மூலமாகவும் கட்டுரைகள் மூலமாகவும் பாடல்வரிகள் மூலமாகவும் அனைவரையும் திணற வைத்தவர் கண்ணதாசன்.
தமிழ் என்றாலே அது கண்ணதாசன் தான். அதுவும் ‘அத்திக்காய் காய் காய் ஆலங்காய்’ என்ற பாடல் இன்று வரை மக்கள் மத்தியில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அந்த பாடலில் அவரின் தமிழ் புலமை எவ்வாறு உள்ளது என்று பார்த்தால் வியப்பாக தான் இருக்கிறது.
இதே பாடலை வேறெந்த மொழியில் மொழி பெயர்த்து கேட்டாலும் தமிழில் உள்ள சிறப்பு வேறெந்த மொழிக்கும் கிடைக்காது. அந்த அளவுக்கு தமிழில் புகுந்து விளையாடுபவர் கவிஞர் கண்ணதாசன். கண்ணதாசன் வரிகளில் அனைத்து நடிகர்களும் டூயட் பாடியுள்ளனர்.
பாடல்களை எழுதுவது மட்டுமில்லாமல் படங்களை தயாரித்தும் படங்களுக்கு வசனம் எழுதியும் வந்தார் கண்ணதாசன். சில பழம்பெரும் கலைஞர்களின் வாழ்க்கையை புரட்டி பார்த்தால் அவர்கள் அனுபவித்த சில கசப்பான சம்பவங்களும் சில நகைச்சுவையான சம்பவங்களும் நாம் அறிய நேரலாம்.
இதையும் படிங்க : நடிகையை தொட்டு நடிக்க கூச்சப்பட்ட ஜெய்சங்கர்!.. காரணம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க…
அந்த வகையில் கண்ணதாசன் நடிகர் சந்திரபாபுவால் ஒரு கட்டத்தில் பொறுமை இழந்திருக்கிறார். அந்த காலத்தில் கால்ஷீட் பிரச்சினையை அடிக்கடி சந்திப்பவர் நடிகர் சந்திரபாபுவாகத்தான் இருப்பாராம். ஒழுங்கா ஷூட்டிங் வரமாட்டாராம். வந்தால் விடாபிடியாக நடித்துக் கொடுத்து விட்டு தான் போவாராம்.
இந்த நிலையில் கண்ணதாசன் வசனத்தில் அவரே தயாரித்து கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் கவலையில்லாத மனிதன் திரைப்படம். இந்த திரைப்படத்தில் சந்திரபாபு தான் ஹீரோ . இந்த படத்தால் சந்திரபாபுவால் ஏராளமான கஷ்டங்களை அனுபவித்திருக்கிறாராம் கண்ணதாசன். ஒரு சமயம் படத்தின் கடைசி க்ளைமாக்ஸ்.
ஆனால் சந்திரபாபு வரவில்லையாம். உடனே கண்ணதாசன் நானே போய் அழைத்துவருகிறேன் என்று சந்திரபாபு வீட்டிற்கே போய்விட்டாராம். ஆனால் இவர் வருவதை அறிந்த சந்திரபாபு தப்பியோடி விட்டாராம். அதன்பிறகு பிடித்து படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர். இந்த சுவாரஸ்ய தகவலை கவலையில்லாத மனிதன் படத்தின் உதவி இயக்குனரும் நடிகருமான ரா. சங்கரன் கூறினார்.