சட்டி சுட்டதடா.. கை விட்டதடா.. இந்த பாட்டுக்கு பின்னாடி இருக்கும் பிரபல நடிகரின் கதை!.. குசும்புக்காரர் தான் இந்த கவிஞர்..
தமிழ் சினிமாவில் நம்பியாருக்கு இணையான ஒரு வில்லன் நடிகராக மிகவும் பிரபலமாக பேசப்பட்டவர் பி.எஸ்.வீரப்பா. பெரும்பாலும் புராண கதைகளில் இவரை வில்லன் கதாபாத்திரத்தில் நாம் பார்த்திருப்பது உண்டு. குறிப்பாக இவரை நினைக்கும் போது நம் நினைவுக்கு வருவது ‘சபாஷ் சரியான போட்டி’.
இந்த வசனத்திற்கு சொந்தக்காரர் பி.எஸ்.வீரப்பா. அவரின் கம்பீரமான குரலோடு ஒலித்த இந்த வசனம் அவரின் பாணியிலேயே இன்றளவும் சொல்லப்படுவதுண்டு. அந்த அளவுக்கு பெருமையாக கருதப்பட்டவர் தான் வீரப்பா. நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றினார் வீரப்பா.
இதையும் படிங்க :இந்த மூணுக்கும் அடிமையாகிடாதீங்க!.. மிகவும் மோசமாக இருந்த என்னை மாத்தினதே இவங்கதான்.. ரஜினி பெருமிதம்..
இவரது தயாரிப்பில் ஏராளமான படங்கள் திரையரங்குகளை அலங்கரித்திருக்கிறது. அந்த வகையில் குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது சிவாஜியின் நடிப்பில் வெளிவந்த ‘ஆலயமணி’ திரைப்படம். இந்த படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக சரோஜா தேவி நடித்திருப்பார். அவர்களுடன் எஸ்.எஸ்.ராஜேந்திரன், விஜயகுமாரி மற்றும் பல நடிகர்கள் நடித்திருந்தனர்.
படம் வெளியாகி வெற்றிகரமாக 100 நாள்களை கடந்து ஓடிய படம். அதிலும் அந்த படத்தில் மிகவும் பிரபலமாக பேசப்பட்ட பாடல் ‘சட்டி சுட்டதடா கை விட்டதடா’ என்று பாடல். இந்த பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் கண்ணதாசன் என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதுதான் இல்லை.
இந்த ஒரு பாடலுக்காக வீரப்பா கண்ணதாசனுக்காக 20 நாள்கள் காத்திருந்தாராம். கண்ணதாசனோ பல படங்களில் பிஸியாக இருந்ததனால் அவரால் இவர் எதிர்பார்த்த தேதியில் கொடுக்க முடியவில்லையாம். உடனே வீரப்பா அவரது மேனேஜரை அனுப்பி கேட்க சொல்லியிருக்கிறார். ஆனால் மேனேஜர் போவதற்கு முன் கண்ணதாசனை அழைக்க வேறொரு குரூப் அங்கு அமர்ந்திருக்குமாம்.
வீரப்பா பல தடவை தொலைபேசியில் அழைத்தும் அந்த ஒரு பாடலை கண்ணதாசனல் எழுதி கொடுக்க முடியவில்லையாம். உடனே கடுங் கோபத்தில் இருந்த வீரப்பா நேராக கண்ணதாசன் இருக்கும் அலுவலகத்திற்கே சென்று விட்டாராம். சென்ற அவர் கண்ணதாசனை பார்த்து என்ன ஐயா உங்களால் ஒரு பாடலை கொடுக்க முடியவில்லையா?
சும்மா சட்டி சுட்டுருச்சு கை விட்டுருச்சுனு ஒரு பாடலை எழுதிக் கொடுக்கிறத விட்டுட்டு இவ்ளோ நாளாக இழுத்தடிக்கிறீங்களே? என்று ஆவேசமாக கேட்டிருக்கிறார். அவர் பேசிய வார்த்தைகளை வைத்து எழுந்தது தான் சட்டி சுட்டதா கை விட்டதடா என்ற பாடல். இன்று அந்த பாடலுக்கு எத்தனை ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று உலகம் அறிந்த விஷயம். இந்த சுவாரஸ்ய தகவலை கண்ணதாசனின் மகனான அண்ணாத்துரை கண்ணதாசன் கூறினார்.