அடுத்த ஜென்மத்தில் அந்த நடிகைக்கு சகோதரனாக பிறக்க வேண்டும்!.. கண்ணதாசனின் ஆசைக்கு காரணமான நடிகை யார் தெரியுமா?.
இலக்கியம், புதினம், நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என அனைத்திலும் கண்ணதாசனின் ஆளுமையை வியந்து பாராட்டதவர்களே இல்லை. தமிழ் புலமை மிக்கவர்களில் கவிஞர் கண்ணதாசன் ஒரு குறிப்பிடத்தகுத்த இடத்தில் இருக்கிறார்.
மற்றவர்களின் கஷ்டத்தை தன்னுடைய கஷ்டம் என கருதி அதை தன் பாட்டின் மூலம் வெளிப்படுத்துவார். தேசிய கீதம் ஒன்று மட்டுமே கவிஞர் எழுதாத ஒரு பாடல் என்று வாலி சொல்லுமளவிற்கு பெருமைக்குரியவர் கவிஞர்.
தமிழக அரசவைக் கவிஞராகவும் விளங்கினார். தமிழ் திரையுலகில் தன் கவிதைகளாலும் கட்டுரைகளாலும் பலபேரை கட்டிப் போட்டு வைத்திருந்தவர் கவிஞர் கண்ணதாசன்.
ஏராளமான சினிமா படங்களுக்கு தன் பாடல்கள் மூலம் ஒளி கொடுத்தவர் கண்ணதாசன். முக்கியமான எம்ஜிஆரின் விரும்பத்தகு கவிஞராகவும் விளங்கினார்.இப்படி தமிழ் மேல் உள்ள பற்றால் தன் வாழ்க்கை முழுவதையும் தமிழுக்கே ஒப்படைத்தவர் கவிஞர்.
இப்படி தமிழ் சினிமாவிற்கு பல உயர்ந்த செயல்களை செய்த கண்ணதாசன் ஒரு நடிகைக்கு மட்டும் சகோதரனாக பிறக்க வேண்டும் என நினைத்திருக்கிறார். அது வேறு யாருமில்லை. நடிகை டி.ஆர்.ராஜகுமாரி தான்.
டி.ஆர்.ராஜகுமாரி ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் அவரை தமிழ் சினிமாவிற்குள் ஒரு நடிகை என்ற அந்தஸ்தை பெற்று தந்த படம் ‘சந்திரலேகா’. மேலும் எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களுடன் மிகவும் நாகரீகமாக நடந்து கொள்ளக்கூடிய
நடிகையாகவே விளங்கியிருக்கிறார்.
இதனாலேயே கண்ணதாசனுக்கு அவருக்கு சகோதரனாக பிறக்க வேண்டும் என
எண்ணியிருக்கிறார். இந்த தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.