ஆசையாக நடிக்க வந்த மனோரமா!.. அழ வைத்து வேடிக்கை பார்த்த நடிகர்.. அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் செய்த சம்பவம்..
தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் காலங்காலமாக ஏகப்பட்ட பிரபலங்கள் தங்கள் திறமையை நிரூபித்து வந்திருக்கின்றனர்.அந்த வகையில் ஆச்சி என அனைவராலும் பாசத்தால் அழைக்கப்பட்டவர் நடிகை மனோரமா. கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் தான் மனோரமா.
திரைத்துறையில் சாதிக்கமுடியாத சாதனைகளை பெற்று விளங்கும் மனோரமாவின் ஆரம்ப வாழ்க்கையில் அவர் பட்ட கஷ்டங்களை தங்கள் அனுபவத்தின் வாயிலாக கூறினார் தயாரிப்பாளரான வீரய்யா. இவர் கண்ணதாசனுடன் பல படங்களில் ஒன்றாக பணிபுரிந்தவர்.
ஒரு சமயம் மனோரமாவின் நாடகத்தை பார்த்த கண்ணதாசன் அவரின் நடிப்பை பார்த்து என்னுடன் வா, திரைத்துறையில் சேர்த்து விடுகிறேன் என்று மனோரமாவை முதன் முதலில் சினிமாவில் நடிக்க வைத்தவர் கண்ணதாசன் தான். கண்ணதாசன் தயாரித்த மாலையிட்ட மங்கை படம் தான் மனோரமா நடித்த முதல் படம்.
இதையும் படிங்க : முதல் படத்திலேயே செம மாஸ் கலாய் கொடுத்த நகைச்சுவை ஜாம்பவான்…! செந்திலுடன் மட்டும் இவ்ளோ படங்களா?
அந்த படத்தில் மனோரமாவிற்கு ஜோடியாக காக்கா ராதாகிருஷ்ணன் நடித்தாராம். முதலில் மனோரமா நாடகங்களில் ஹீரோயினாகத்தான் நடித்திருக்கிறார். அதனால் படத்திலும் ஹீரோயினாக நடிப்பேன் என்று சொல்லியிருக்கிறார். ஆனால் கண்ணதாசன் ஹீரோயின் அடையும் பெருமையை விட காமெடி நடிகையாக பெரும் புகழ் பெற்று விளங்குவாய் என்று கூறியிருக்கிறார்.
அதன் படியே அவர் காட்சிகள் படமாக்கப்பட்ட போது 2, 3 டேக்குகள் வாங்கியிருக்கிறார். அதனால் கடுப்பாகி போன கேமிரா மேனும் காத்தாடி ராதாகிருஷ்ணனும் மனோரமாவை இந்த படத்தில் இருந்து நீக்கி விடுவது தான் சரி, நடிக்க தெரியவில்லை என்று கூறி கண்ணதாசனின் நண்பரான வீரய்யாவிடம் கூறியிருக்கிறார்கள்.
இதை அறிந்த கண்ணதாசன் அது எப்படி அவர்கள் சொல்லலாம். மனோரமாவிற்கு தெரியவில்லை என்றால் சொல்லிக் கொடுப்பது நம் கடமை, அதை விட்டு அவரை வெளியே அனுப்புவது எப்படி சரியாகும். அவர் தான் நடிப்பார் என்று மனோரமாவை மறுபடியும் நடிக்க வைத்திருக்கிறார் கண்ணதாசன். இதற்கிடையில் எல்லாரும் இப்படி சொல்கிறார்கள் என்று மனோரமா தன் தாயிடம் கூறி அழுது புலம்பியிருக்கிறார். அவரது தாயும் சேர்ந்து அழுதாராம். அவர்களுக்கு ஆதரவு கூறி கண்ணதாசன் அவர்களை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார். இதை வீரய்யா தன் பேட்டியில் கூறும் போது தெரிவித்தார்.