கண்ணான கண்ணே சீரியல் ஹீரோவின் கள்ளக்காதல்… வந்தா எல்லாம் ஒன்னா பிரச்னைக்கு இறங்குவீங்களோ..!

by Akhilan |
கண்ணான கண்ணே சீரியல் ஹீரோவின் கள்ளக்காதல்… வந்தா எல்லாம் ஒன்னா பிரச்னைக்கு இறங்குவீங்களோ..!
X

Kannana Kanne: தமிழ் சீரியல்களில் சமீபத்திய ஹிட் கொடுத்தது கண்ணான கண்ணே சீரியல். இதில் பிரித்விராஜ், ராகுல் ரவி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து இருந்தனர். தற்போது இந்த சீரியல் ஹீரோ ஒரு பிரச்னையில் சிக்கி இருக்கிறார்.

இந்த சீரியலில் நடிக்கும் போது தான் பிரித்விராஜ் தன்னுடைய இரண்டாவது காதலி ஷீத்தலை அறிமுகம் செய்தார். கிட்டத்தட்ட 7 மாதம் கூட முடியாத நிலையில் இருவரும் பிரிந்தனர். அந்த சர்ச்சையே இன்னும் ஓயாத நிலையில் இன்னொரு ஹீரோ ராகுல் ரவி தற்போது ஒரு பிரச்னையை செய்து இருக்கிறார்.

இதையும் படிங்க: சலார் பிரபாஸா இது!.. படத்துல பிரசாந்த் நீல் ரொம்ப பட்டி டிங்கரிங் பார்த்துருப்பாரு போல.. தப்பிக்குமா?

சன் டிவி நந்தினி சீரியல் மூலம் அதிக ரசிகைகளை கவர்ந்தவர் ராகுல் ரவி. அவர் தமிழிலேயே நிறைய சீரியல்களில் நடித்தும் இருக்கிறார். சமீபத்தில் அவர் கண்ணான கண்ணே சீரியலில் நடித்து முடித்து இருந்தார். அந்த சீரியலில் நடித்து கொண்டு இருக்கும் போது 2020ம் ஆண்டு லட்சுமி நாயர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் நிறைய வாழ்த்துக்கள் கிடைத்தது.

இவர்களின் போஸ்ட் வெட்டிங் போட்டோஸ் கூட இணையத்தில் வெளியாகி லைக் தட்டியது. இந்நிலையில் ராகுல்ரவி இன்னொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததை லட்சுமியே கையும் களவுமாக பிடித்து இருக்கிறார். இதை கேள்வி கேட்ட போது அவர் மனைவியை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் லட்சுமி நாயர் ராகுல் ரவி மீது புகார் கொடுத்து இருக்கிறாராம்.

இதையும் படிங்க: ஷாக்கிங்.. அபிஷேக் பச்சன் வீட்டை விட்டே வெளியேறிய ஐஸ்வர்யா ராய்.. விவாகரத்து வதந்தி உண்மையானதா?..

Next Story