இது என்ன பாட்டு?!.. அவமானப்படுத்திய நடிகை!… பாட்டு மூலம் திமிரை அடக்கிய கண்ணதாசன்…

Published on: October 22, 2023
kannadhasan
---Advertisement---

Lyricist Kannadhasan: கண்ணதாசன் தமிழ் சினிமா பாடலாசிரியர்களில் ஒருவர். இவர் பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். அந்த காலத்தில் அனைவரும் விரும்பும் பாடலாசிரியர்களில் இவரும் ஒருவர். இவரின் பாடல் வரிகள் கேட்பவர்களின் காதுகளுக்கு இனிமை தரும். மிகவும் எளிமையான தமிழில் பாமர மக்களுக்கும் புரியும் வகையில் இவரின் பாடல்கள் இருக்கும்.

ஆனால் இவரின் வரிகளையே அந்த காலத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்த நடிகை பானுமதி நிராகரித்துள்ளார். சிவாஜி, எம்.ஜி.ஆர் போன்ற முன்னணி நடிகர்களே இவரிடம் பேச பயப்படுவார்களாம். அந்த அளவு இவர் சினிமாவை பற்றிய அறிவினை உடையவராக இருந்துள்ளார். இவர் நடிகையை தாண்டி சிறந்த பாடலாசிரியர் மற்றும் பாடகியும் கூட.

இதையும் வாசிங்க:சொன்னது ஒண்ணு..செய்றது ஒண்ணு..எம்.எஸ்.வி மீது கடுப்பான கண்ணதாசன்..இப்படியா பழிவாங்குவாரு!..

இவர் தமிழில்  லைலா மஜ்னு, சண்டிராணி போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம்தான் ராணி. இப்படத்தில் வரும் ஒரு பாடலுக்கு கண்ணதாசனை பாடல் எழுதுமாறு அழைத்துள்ளனர். அப்போது கண்ணதாசன் புகழடையாத ஆரம்பகாலம் என்பதால் அப்படத்தின் இசையமைப்பாளருக்கு கண்ணதாசன் மேல் பெரிய அளவில் ஆர்வம் இல்லை.

பின் படத்தின் கதையை கூறி கண்ணதாசனும் பாடல் எழுதி முடித்துவிட்டார். அப்பாடலை பானுமதியிடம் பாடுவதற்காக கொடுக்கின்றனர். பாடலை பார்த்த பானுமதி இது என்ன வரிகள் எதுவுமே புரியவில்லையே என கூறி நிராகரித்துவிட்டாராம். இதனால் கவலையடைந்த கண்ணதாசனிடம் வேறு பாடலை எழுதி தருமாறு கூறிவிட்டு பானுமதி அங்கிருந்து சென்று விட்டாராம்.

பின் அங்கிருந்தவர்கள் இப்படம் கதாநாயகியை மையப்படுத்திய படம். அதனால் பானுமதியை மீறி இங்கு ஏதும் நடக்காது. அவருக்கு பிடித்த மாதிரியான பாடலை எழுதி கொடுக்குமாறு கூற அந்த பாடலும் பானுமதிக்கு பிடிக்கவில்லையாம். பின் அப்படத்தின் இசையமைப்பாளரும் கண்ணதாசனை இகழ்ந்து பேசியுள்ளார். கோபப்பட்ட கண்ணதாசன் என்னால் 100 பாடலாசிரியர்களை கூட உருவாக்க முடியும் என கூறிவிட்டு சென்றுவிட்டாராம்.

இதையும் வாசிங்க:நான் வந்தா அது மரியாதையா இருக்காது..! கண்ணதாசன் ஊர்வலத்தில் கடுப்பான எம்.ஜி.ஆர்..

பின் ஆண்டுகள் பல ஓட கண்ணதாசன் புகழின் உச்சிக்கு சென்றுவிட்ட காலத்தில் சிவாஜி மற்றும் பானுமதி இருவரும் இணைந்து அம்பிகாபதி திரைப்படத்தில் நடிக்கின்றனர். இப்படத்தில் பாடலை எழுத கண்ணதாசனை அழைக்கின்றனர். அவரும் வந்து பாடல் எழுதுகிறார். அப்பாடலை பார்த்து பானுமதி இந்த பாடலை எழுதியது யார்…பாடல் வரிகள் மிகவும் இனிமையாக உள்ளன..இப்பாடலை எழுதியவர காணவேண்டும் என கூறுகிறார்.

அப்பாடல்தான் கண்ணிலே இருப்பதென்ன கன்னியிளமானே…காவியமோ ஓவியமோ கன்னியிளமானே…பாடல். பின் கண்ணதாசனை பார்த்தவுடன் அவருக்கு பழைய சம்பவம் நினைவில் வந்துள்ளது.  அப்போது இப்பாடல் மிகவும் நன்றாக இருக்கிறது என பானுமதி கூறியுள்ளார். அதற்கு கண்ணதாசன் ஏற்கனவே நடந்த சம்பவத்தை பானுமதியிடம் கூறி என்னை நியாபகம் இருக்கிறதா? என கேட்டுள்ளார். அதற்கு பானுமதியால் பதிலளிக்க முடியாமல் வெட்கத்தில் நின்றுவிட்டாராம். தன்னை அவமானபடுத்தியவர் முன்னால் சாதித்து காட்டியது கண்ணதாசனின் புகழுக்கு ஒரு எடுத்துகாட்டாகும்.

இதையும் வாசிங்க:நடிகைக்கு மறைமுகமாக சவால் விட்ட பத்மினி!.. பாடல் வரி மூலம் உதவிய கண்ணதாசன்!. அந்த நடிகை அவரா?!..

amutha raja

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.