Kannadhasan: தமிழ் சினிமாவில் தனது தித்திக்கும் தமிழால் பல அற்புதமான பாடலை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன். ஆரம்பத்தில் தமிழ் சினிமாவில் இவரது பாடல்கள் இல்லாத படமே கிடையாது என கூறலாம். அந்த அளவுக்கு தனது பாடல்களின் மூலம் மக்களை கட்டி போட்டவர் கவியரசர் கண்ணதாசன்.
இவர் ஆரம்பத்தில் சினிமாவில் பாடலாசிரியராய் வர வேண்டும் எனும் எண்ணத்தில்தான் இருந்துள்ளார். இருந்தாலும் தற்சமயம் ஏதாவது ஒரு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக மாடர்ன் தியேட்டர்ஸின் சண்டமாருதம் எனும் பத்திரிக்கையில் பணியாற்றியுள்ளார். ஆனால் வேலை கிடைத்தது என்னவோ சேலத்தில்தான். அப்போது தன்னிடம் பணம் இல்லாததால் தனக்கு தெரிந்த ஒரு கட்டுரயை எழுதி அதை ஒருவரிடம் விற்று அதற்கான தொகையை பெற்று கொண்டாராம்.
இதையும் வாசிங்க:விஜயகாந்துடன் 21 முறை மோதிய சத்யராஜ் படங்கள்… வின்னர் யாரு தெரியுமா?
பின் சண்டமாருதம் பத்திரிக்கை வேலை கண்ணதாசனுக்கு திருப்தி அளிக்காததால் அப்பத்திரிக்கை அதிபரிடம் சென்று ராஜினாமா கடித்தத்தை கொடுத்தாராம். ஆனால் அந்த அதிபருக்கு கண்ணதாசனை அனுப்ப மனமில்லாமல் தன்னுடைய சினிமா இலக்கிற்கு கதை எழுத அனுப்பிவிட்டாராம். பின் திரைக்கதை எழுத ஆரம்பித்தாராம். இருந்தாலும், பாடல் எழுத வாய்ப்பு கிடைக்கவில்லை மேலும் இவர் எழுதிய கதைகளும் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அந்த நேரத்தில் கருணாநிதி மாடர்ன் தியேட்டர்ஸில் வந்து மிக பெரிய ஆளாக உருவெடுத்துள்ளார். அப்போது பொறுமை இல்லாத கண்ணதாசன் மறுபடியும் வேலையை ராஜினாமா செய்துவிட அந்நிறுவனத்தின் அதிபர் கோபமாகி ‘நீ சென்று வா’ என கூறி அனுப்பிவிட்டாராம்.
இதையும் வாசிங்க:எம்ஜிஆர் இருக்கும் போதே வந்திருக்கலாமே! மிஸ் பண்ணிட்டீயே.. கேப்டனை பார்த்து ஜானகி சொன்ன விஷயம்
மனமுடைத்த கண்ணதாசன் கோயம்புத்தூருக்கு செல்லும் ரயிலில் ஏறி செல்கிறார். இவ்வளவு திறமையிருந்தும் தனக்கு வாய்ப்பு இல்லையே என வருத்தத்தில் இருந்துள்ளார். அப்போது ரயிலில் கண் பார்வையற்ற சிலரை பார்க்க அவர்களை பார்த்தும் மிகவும் வருத்தப்பட்டுள்ளார். இது ஒரு புறமிருக்க ரயிலில் எதர்ச்சையாக ஒரு பிச்சைக்காரர் வர அவரது கையில் ஒரு கண்பார்வை இல்லாத குழந்தை இருந்ததாம்.
அப்போது அக்குழந்தை ‘சிறிதும் கவலை படாதே… மன உறுதியை மட்டும் விட்டு விடாதே’… என பாடியுள்ளது. பின் தனது இலக்கை நோக்கி சென்ற கண்ணதாசனுக்கு இயக்குனர் ராம்நாத் பாடல் எழுத வாய்ப்பு கொடுத்துள்ளார். அப்போது காட்சிகளை இயக்குனர் சொல்ல கண்ணதாசன் ரயிலில் சந்தித்த குழந்தை பாடிய வரிகளை மனதில் வைத்து கொண்டு கன்னியின் காதலி திரைப்படத்தில் வரும் ‘கலங்காதே மனமே… உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே’ எனும் தனது முதல் பாடலை எழுதியுள்ளார்.
இதையும் வாசிங்க:இது நடந்த அப்புறம்தான் உனக்கு கல்யாணம்!. விஜயகாந்துக்கு கண்டிஷன் போட்ட இப்ராஹிம் ராவுத்தார்..
Sivakarthikeyan: இசை…
ஜெயம் ரவி…
நடிகை கஸ்தூரி…
சினிமா செலிப்ரட்டிகளுக்கு…
தற்போது விஜய்…