அழுதுகொண்டே சினேகன் மனைவி செய்த காரியம்….வீடியோ பாருங்க….

Published on: October 19, 2021
kannika
---Advertisement---

நடிகை கன்னிகா ரவி தொலைக்காட்சியில் வி.ஜே-வாக பணிபுரிந்தவர். ‘அமுதா ஒரு ஆச்சர்யக்குறி’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார். டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வந்தார்.

திடீரென அவருக்கும், பாடலாசிரியர் சினேகனுக்கும் திருமணம் என அறிவிக்கப்பட்டது. அப்போதுதான் அவருக்கும், சினேகனுக்கும் இடையே காதல் இருப்பது எல்லோருக்கும் தெரியவந்தது.

kannika

நடிகர் கமல்ஹாசன் தாலி எடுத்துக்கொடுக்க இவர்களின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இயக்குனர் பாரதிராஜா, பேராசிரியர் ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அதன்பின் திருமண வரவேற்பு ஒரு ஹோட்டலில் நடந்தது. இதில், திரையுலகினர் சிலர் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

kannika

இந்நிலையில், தன்னுடைய காதல் கணவருக்காக கன்னிகா ரவி செய்துள்ள விஷயம் பலரையும் நெகிழ வைத்துள்ளது. அதாவது, கணவரின் பெயரை தன்னுடைய வலது கையில் டாட்டுவாக குத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஊமை விழிகள் போல் இரண்டு மடங்கு… விஜயகாந்தின் ‘மூங்கில் கோட்டை’என்னாச்சு?

இது தனது முதல் டாட்டூ எனவும், தனக்கு பிடித்த ஒருவருக்காக இது போன்ற விஷயம் செய்வது சந்தோஷமாக இருக்கிறது என ஆனந்த கண்ணீரோடு கூறி டாட்டு குத்தும் போது எடுத்த வீடியோவை ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

kannika

பொதுவாக நடிகைகள் கண்ட இடங்களில் டாட்டு குத்திக்கொள்வார்கள். நயன்தாரா, திரிஷா ஆகியோர் டாட்டு குத்திக்கொண்ட புகைப்படங்கள் ஏற்கனவே வெளியானது. ஆனால், கன்னிகா ரவியோ காதல் கணவரின் பெயரை டாட்டுவாக குத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment