கண்ணும் கண்ணும் கலந்து பாடலில் வெற்றி யாருக்கு தெரியுமா? புத்திசாலித்தனமாக யோசித்த எஸ்.எஸ்.வாசன்

தமிழில் முக்கிய பாடலாக இருக்கும் கண்ணும் கண்ணும் கலந்து பாடலில் கடைசியில் யார் வெற்றி பெறுவார். அதற்கு ட்விஸ்ட் வைத்த எஸ்.எஸ்.வாசன் குறித்த முக்கிய தகவல்கள் உங்களுக்காக.

1958ம் ஆண்டு வெளிவந்த படம் வஞ்சி கோட்டை வாலிபன். இப்படத்தினை எஸ்.எஸ்.வாசன் தயாரித்தார். ஜெமினி கணேசன், பி.எஸ்.வீரப்பா, வைஜெயந்திமாலா மற்றும் பத்மினி ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியில் ராஜ் திலக் என்ற பெயரில் அதே முன்னணி நடிகர்களைக் கொண்டு ரீமேக் செய்யப்பட்டது.

கண்ணும் கண்ணும் கலந்து

கண்ணும் கண்ணும் கலந்து

படத்தின் வெற்றியினை போல அப்படத்தில் இடம்பெற்ற கண்ணும் கண்ணும் கலந்து பாடலும் மிகப்பெரிய வெற்றியினை பெற்றது. அந்தப் பாடல் காட்சியின் இடையில் “சபாஷ் சரியான போட்டி” என்பார் பி.எஸ்.வீரப்பா. அந்த வசனம் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கும்படியாக இருக்கும்.

பாடலில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் போட்டி போட்டுக் கொண்டு நடனம் ஆடுவர். இதில் யார் வெற்றி பெறுவார் என சொல்லப்படாமலே உத்திரத்தின் மேல் இருந்த மிகப் பெரிய லஸ்தர் விளக்கு கீழே விழ அதை பத்மினியும் வைஜயந்திமாலாவும் அதிர்ச்சியாக பார்ப்பது போல இந்த பாடல் முடிந்திருக்கும்.

பத்மினி

பத்மினி

இதற்கு ஒரு காரணமும் இருக்கிறதாம். தமிழ் மற்றும் இந்தியில் உருவான இப்படத்தின் காலத்தில் வைஜெயந்திமாலா இந்தியில் மிகப்பெரிய நடிகையாக இருந்தார். பத்மினி தமிழில் கொடிக்கட்டி பறந்தார். இதில் வைஜயந்திமாலா வெற்றி பெற்றதாகக் காட்டினால் நிச்சயமாக தமிழ் ரசிகர்கள் அதை விரும்ப மாட்டார்கள். அதேபோன்று பத்மினி வெற்றி பெற்றதாகக் காட்டினால் இந்தி ரசிகர்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதாலே காட்சியை அந்த வகையில் முடித்து இருந்ததாக கூறப்படுகிறது.

Related Articles
Next Story
Share it