Cinema News
கந்தசாமி ஃப்ளாப் ஆனதுக்கு இதுதான் காரணமா?… ஒரு டைரக்டர் இப்படியா அடம்பிடிக்கிறது!
விக்ரம் நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடித்திருக்கிறது. ஆனால் விக்ரமின் பல திரைப்படங்கள் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு தோல்வயும் அடைந்திருக்கிறது. அந்த வகையில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி தோல்வியடைந்த திரைப்படம் “கந்தசாமி”.
இத்திரைப்படம் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியானது. இத்திரைப்படத்தை சுசி கணேசன் இயக்கியிருந்தார். கலைப்புலி எஸ்.தாணு இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார். இதில் விக்ரமிற்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் பிரபு, வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி போன்ற பலரும் நடித்திருந்தனர்.
“கந்தசாமி” திரைப்படம் வெளியாவதற்கு முன்பு இத்திரைப்படத்திற்கு மிகவும் பிரம்மாண்டமாக புரோமோஷன் செய்தார் கலைப்புலி தாணு. விக்ரமின் சேவல் கெட்டப் பல எதிர்பார்ப்புகளை கிளப்பியது. ஆனால் இத்திரைப்படம் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இந்த நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, “கந்தசாமி” திரைப்படம் தோல்வியடைந்தது குறித்த ஒரு தகவலை பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “கந்தசாமி” திரைப்படம் 3 மணி நேரத்திற்கு மேல் அதன் ரன் டைம் இருந்தது. கலைப்புலி எஸ்.தாணு, இயக்குனரிடம் “ரன்டைம்-ஐ குறைந்தால் படம் நன்றாக இருக்கும்” என கூறியுள்ளார். ஆனால் இயக்குனரோ, ‘ஹிந்தியில் வெளிவந்த லகான் படம் 3 மணி நேரத்திற்கும் மேல் ரன்டைம் இருந்தது. அந்த திரைப்படம் நன்றாக ஓடியது. அதே போல் இத்திரைப்படமும் ஓடும்” என கூறியுள்ளார்.
இயக்குனர் விருப்பப்படுகிறாரே என்ற காரணத்தால் கலைப்புலி தாணுவும் சரி என்று ஒப்புக்கொண்டிருக்கிறார். ஆனால் அவர் நினைத்தது போலவே “கந்தசாமி” திரைப்படம் தோல்வியை தழுவியது.
இதையும் படிங்க: தயாரிப்பாளர் செய்த காரியத்தால் கடைசிவரை சம்பளமே வாங்காமல் பாட்டெழுதிய வாலி… என்ன செய்தார் தெரியுமா?