கரகாட்டக்காரன் படத்தில் நீங்கள் அறியாத சுவாரஸ்ய தகவல்கள்... இந்த காமெடி காப்பியா...

by Akhilan |
கரகாட்டக்காரன்
X

கரகாட்டக்காரன்

தமிழ் சினிமாவின் வெற்றி படமான கரகாட்டக்காரன். இப்படத்தில் சில சுவாரஸ்ய குளறுபடிகளும் நடந்து இருக்கிறது. அதை இயக்குனர் கங்கை அமரன் கூட ஒப்புக்கொண்டிருக்கிறார். அதுகுறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

கரகாட்டக்காரன் ராமராஜனுக்கு பெரிய திருப்பமாக அமைந்த திரைப்படம். 1989ம் ஆண்டு வெளியாகிய கவுண்டமணி, செந்தில் இணைந்து நடித்த இப்படத்தின் நகைச்சுவை மிகப்பெரிய ஹிட் அடித்தது. படத்திற்கு மிகப்பெரிய பிளஸ்ஸாக அமைந்தது இளையராஜா இசை. 1968-ல் வெளியான ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்தின் காப்பியாக தான் ‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் அமைந்தது.

கரகாட்டக்காரன்

கரகாட்டக்காரன்

இந்த விஷயங்களை ஒப்புக்கொள்வதில் இயக்குனர் கங்கை அமரன் எப்போதுமே கவலைப்பட்டது இல்லை. ஒரு பேட்டியில் இது குறித்து அவரிடம் கேட்கப்பட்டது போதே, “ஆமாம்... தில்லானா மோகனாம்பாள் கதையின் உல்டாதான் கரகாட்டக்காரன்" என நேரடியாக ஒப்புக்கொண்டார். இதை நகைச்சுவையாக அப்படத்தின் காமெடி ஒன்றிலே வைத்திருந்தார்.

தில்லானா மோகனாம்பாள் படத்துல வர்ற சிவாஜி, பத்மினி மாதிரியே இருக்கு என கோவை சரளா மற்றும் செந்திலை ஒருவர் கூற கவுண்டமணி கலாய்ப்பார். அதுமட்டுமல்லாமல் இந்த படத்தில் ஹிட் அடித்த காட்சி வாழைப்பழ காமெடி தானாம். அதும் ஒரிஜினல் இல்லை. ஒரு மலையாள படத்தில் இருந்து உருவியது எனக் கூறப்படுகிறது.

கரகாட்டக்காரன்

கரகாட்டக்காரன்

டூயட் காட்சிகளில் ராமராஜனின் எம்.ஜி.ஆரினை போல நடித்திருப்பார். இப்படத்தில் கனகா அறிமுகமாகினார். இப்படம் வணிகரீதியாக மாஸ் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story