நடித்தால் ஹீரோ தான்… அடம்பிடித்த ராமராஜன்… கைவிடப்பட்ட கரகாட்டக்காரன் 2..

by Arun Prasad |   ( Updated:2022-09-21 07:25:31  )
நடித்தால் ஹீரோ தான்… அடம்பிடித்த ராமராஜன்… கைவிடப்பட்ட கரகாட்டக்காரன் 2..
X

ரஜினி, கமல் போன்ற போட்டி நடிகர்கள் கொடிகட்டி பறந்த காலத்தில் தனியாக ஒரு டிராக் போட்டு மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார்ந்தவர் ராமராஜன். “எங்க ஊரு பாட்டுக்காரன்”, “எங்க ஊரு காவல்காரன்”, “வில்லுப்பாட்டுக் காரன்” என கிராமத்தை மையமாக கொண்டு பல வெற்றித் திரைப்படங்களை ராமராஜன் கொடுத்திருந்தாலும், அவர் நடித்த “கரகாட்டக்காரன்” திரைப்படம் இன்றளவும் ரசிக்கப்படும் ஒரு cult திரைப்படமாக மாபெரும் வெற்றி பெற்றது.

குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் வேற லெவல் ஹிட் அடித்தன. இன்றளவும் மிகவும் பிரபலமான கவுண்டமணி செந்திலின் “வாழைப்பழ” காமெடி இடம்பெற்றது இத்திரைப்படத்தில் தான்.

இதில் ராமராஜனுக்கு ஜோடியாக கனகா நடித்திருந்தார். இத்திரைப்படத்தை கங்கை அமரன் இயக்கிருந்தார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட கங்கை அமரன், கரகாட்டக்காரன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த ஒரு சுவாரஸ்யமான செய்தியை பகிர்ந்துகொண்டார்.

அதாவது “கரகாட்டக்காரன் பார்ட் 2 எடுப்பதற்கான கதையை தயார் படுத்தியிருந்தோம். ராமராஜன் கீர்த்தி சுரேஷின் தந்தையாகவும், விஜய் சேதுபதி பக்கத்து ஊரில் இருந்து வரும் கரகாட்டக்காரராகவும் நடித்தால் நன்றாக இருக்கும் என நினைத்தோம்.

இதனை ராமராஜனிடம் கூறினோம். ஆனால் ராமராஜன் தான் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன் என கூறிவிட்டார். அதன் பின் கரகாட்டக்காரன் பார்ட் 2 என்ற முடிவையே கைவிட்டுவிட்டோம்” என கூறியுள்ளார்.

ராமராஜன் சில வருடங்களுக்கு முன்பு “மேதை” என்ற திரைப்படத்தில் நடித்தார். ஆனால் அதன் பின் திரைப்படங்களில் தலைகாட்டவில்லை. இந்த நிலையில் “சாமானியன்” என்ற திரைப்படத்தில் ராமராஜன் நடிக்க உள்ளதாக ஒரு அட்டகாசமான அறிவிப்பு வீடியோ சமீபத்தில் வெளிவந்தது. “Ramarajan is back” என ரசிகர்கள் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Next Story