40 ஆயிரம் போட்டு 40 லட்சம் எடுத்த கதை தெரியுமா.?! இதெல்லாம் சினிமா உலகில் மட்டுமே சாத்தியம்.!

by Manikandan |   ( Updated:2022-03-15 13:38:28  )
40 ஆயிரம் போட்டு 40 லட்சம் எடுத்த கதை தெரியுமா.?! இதெல்லாம் சினிமா உலகில் மட்டுமே சாத்தியம்.!
X

சினிமா உலகில் பல விசித்திர நிகழ்வுகள் நடக்கும். சில பிரமாண்ட தயாரிப்பாளர்கள் 100 கோடி பட்ஜெட் என பிரமாண்டமாக படம் தயாரிப்பார்கள் அதனை பிரமாண்டமாக விளம்பரப்படுத்துவார்கள். ஆனால் படம் மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது அதள பாதாளத்திற்கு சென்றுவிடும்.

அதுவே, யாரும் எதிர்பார்க்காத ஒரு திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிவிடும். பட்ஜெட்டை விட அதிக மடங்கு லாபம் கிடைத்திருக்கும். அப்படி ஒரு திரைப்படம் தான் கரகாட்டக்காரன். இந்த திரைப்படத்திற்கு விமர்சனங்கள் எதிர்மறையாக தான் வந்தது. பட்ஜெட்டும் அவ்வளோ பெரிய பட்ஜெட் இல்லை. ஆனால் படம் அதிரி புதிரி ஹிட்.

அந்த படத்தை கங்கை அமரன் இயக்கி இருந்தார். இளையராஜா இசையமைத்து இருந்தார். இந்த படத்தை கருமாரி கந்தசாமி என்பவர் தயாரித்து இருந்தார். இவர் அந்த படத்தை தயாரிக்க காசு குறைவாக இருந்ததால், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் அவரிடம் கேட்டிருந்தார்.அவருடன் எந்த அக்ரிமெண்டும் போடாமல் 40 ஆயிரம் காசு கொடுத்து உதவினார்.

இதையும் படியுங்களேன் - படுதோல்வியை சந்தித்த எதற்கும் துணிந்தவன்.! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!

அதற்கு பதிலாக மதுரை ஏரியாவை உங்களுக்கு தருகிறேன் என கருமாரி கந்தசாமி, ரவிச்சந்திரனிடம் கூறியுள்ளார். சொன்னபடி, ரிலீசுக்கு முன்பு ரவிச்சந்திரனுக்கு போன் செய்து, கரகாட்டக்காரன் பெட்டியை பெற்று செல்லுமாறு கூறியுள்ளார்.

அதன் படி கொடுத்த 40 ஆயிரத்திற்கு மதுரை ஏரியாவை வாங்கி கரகாட்டக்காரன் படத்தை திரையிட்டுள்ளார் ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன். படம் எதிர்பார்த்ததை விட அதிரி புதிரி ஹிட். கிட்டத்தட்ட 40 லட்சம் ரூபாயை வசூல் செய்துள்ளது அப்படம். இந்த மாதிரியான அதிசயம் எல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.

Next Story