கராத்தே பயிற்சியாளர் ஹுசைனி காலமானார்!. ரசிகர்கள் அதிர்ச்சி!...

#image_title
Karate husaini: தமிழகத்தில் கராத்தே பயிற்சியாளராக எல்லோரிடமும் அறிமுமானவர் ஹுசைனி. கராத்தே மட்டுமின்றி வில் வித்தையிலும் இவர் சிறந்தவர். லட்சக்கணக்கான பேர் இவரிடம் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். ஒருபக்கம் இவர் சினிமாவில் நடித்திருக்கிறார். பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் நடித்த புன்னகை மன்னன் படத்தின் மூலம் நடிக்க துவங்கினார்.
அதன்பின் விஜய் நடித்த பத்ரி படத்திலும் நடித்திருந்தார். கராத்தே துறையில் பல சாதனைகளையும் செய்திருக்கிறார். இதுவரை 400க்கும் மேற்பட்ட வில் வித்தை வீரர்களுக்கு பயிற்சி கொடுத்திருக்கிறார். தமிழகத்தில் நவீன வில்வித்தையின் முன்னோடியாக இருந்த இவர். பல வருடங்களுக்கு முன்பு செய்து காட்டியதைத்தான் மாஸ்டர் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் விஜய் செய்வார்.

#image_title
கடந்த சில வருடங்களில் ஹுசைனி இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக சிகிச்சை எடுத்துக்கொண்டாலும் அவரின் உடலில் முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே, விரைவில் நான் இறந்துவிடுவேன் என ஊடகங்களுக்கு சொல்லி அதிர்ச்சி கொடுத்தார். அதேநேரம், மரணத்தை கண்டு நான் பயப்படவில்லை.. முடிந்தவரை போராடுவேன் என சொல்லியிருந்தார்.
மேலும், மருத்துவம் மற்றும் உடற்கூறியல் ஆராய்ச்சிக்கு எனது உடலை தானம் செய்கிறேன். என் இதயத்தை மட்டும் என் வில் வித்தை கராத்தே மாணவர்களிடம் ஒப்படையுங்கள் என கூறியிருந்தார். இந்நிலையில்தான், சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அவர் மரணமடைந்தார்.
நடிகர் விஜயை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தார். அவர் என்னை வந்து பார்த்தால் எனக்கு நம்பிக்கை கிடைக்கும் என்றெல்லாம் கோரிக்கை வைத்தார். ஆனால், விஜய் கடைசிவரை அவரை சென்று பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.