கார்த்திக் நடிப்பில் சோடை போன படங்கள்

Karthick and Bhuvana in Kalakkura chandru
நவரச நாயகன் என்று அழைக்கப்படும் நடிகர் கார்த்திக் தமிழ் சினிமாவில் ஒரு மறக்கமுடியாத நடிகர். இவர் பேசும் ஸ்பீடு டயலாக்குகள் புரிவதற்கு சற்று சிரமம். ஏனென்றால் எந்நேரமும் வாயில் வெற்றிலையைப் போட்டு குதப்பியபடி பேசுவது போல் பேசுவார். இருந்தாலும் இவரது நடிப்பு தனி அழகு தான். படபடவெனவும், துருதுருவெனவும் பேசும், சிரிக்கும், துள்ளும் அழகு காண்போரைக் கொள்ளை கொள்ளும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இவரது படங்களில் பல மெகா ஹிட் ஆகியுள்ளன. ரஜினி, கமல் என இரு பெரும் ஜாம்பவான்களுக்கு மத்தியில் தனக்கென தனி இடம் பிடித்து திரையுலகில் தம் பக்கமும் ரசிகர்களை கவர்ந்திழுத்தவர் தான் கார்த்திக். எல்லா நடிகர்களுக்குமே வெற்றி என்று ஒன்று உண்டு என்றால் தோல்வியும் உண்டு. அதுபோல கார்த்திக்கிற்கும் தோல்வி அடைந்த படங்கள் பல உள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
கலக்குற சந்துரு
2007ல் வெளியான இப்படத்தை ரவிராஜா இயக்கினார். கார்த்திக், புவனா, ராதாரவி, பாண்டியராஜன், ஊர்வசி, மோகன் ராமன் உள்பட பலர் உள்ளனர். நகைச்சுவையை மையமாகக் கொண்ட படம் இது.
இருந்தாலும் ரசிகர்களை அந்தளவிற்கு கவரவில்லை என்றே சொல்லலாம். சுனில் சேவியர் இசையில் பாடல்கள் சுமார் ரகங்கள். மச்சம் கொண்ட, சொல்லவா நான் சொல்லவா ஆகிய பாடல்கள் கேட்கும் ரகங்கள்.
குஸ்தி

Karthick and Prabhu in Kusthi
2006ல் வெளியான படம் குஸ்தி. ராஜ்கபூர் இயக்கிய இந்தப்படத்தில் பிரபு, கார்த்திக், வடிவேலு, புளோரா, விஜயகுமார், ராதாரவி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசை அமைத்துள்ளார். இது ஒரு நகைச்சுவை படம். ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு பெரும் வரவேற்பைப் பெறவில்லை.
மனதில்
2004ல் வெளியான இந்தப்படத்தில் கார்த்திக், கௌசல்யா, உள்பட பலர் நடித்துள்ளனர். பரணி இசை அமைத்துள்ளார். என்னை காதலிக்காமல், மாமா மாமா, ஒண்ணு பார்த்ததும், குளிக்க போற சாக்க வச்சு, ஒவ்வொரு பனி துளியும், அந்த பூவே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
லவ்லி

Karthick and Malavika in Lovely
2001ல் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வெளியான படம் லவ்லி. கார்த்திக், மாளவிகா, மகிமா சௌத்ரி, மோனல், நிழல்கள் ரவி, விவேக், மணிவண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப்படத்தில் கார்த்திக்கின் நடிப்பு சூப்பர். இது ஒரு காமெடி மசாலா படம். படம் எதிர்பார்த்த அளவு ஹிட் இல்லை. ஐ நா சபை, மன்மதா, சில்வர் நிலவே உள்பட பல பாடல்கள் உள்ளன. இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ள வினோதமானவளே என்ற பாடல் செம ஹிட்.
குபேரன்
சுந்தர் தாஸ் இயக்கத்தில் 2000ல் வெளியான படம் குபேரன். இதுவும் நகைச்சுவை படம் தான். கார்த்திக், கௌசல்யா, தியாகு, மணிவண்ணன், அஞ்சு, மந்த்ரா, சிந்து உள்பட இந்தப்படத்தில் நடித்துள்ளனர். எஸ்.ஏ.ராஜ்குமார் இசை அமைத்துள்ளார். என்னவோ, என்னவோ, தாயே திரிசூலி, ஜாப்பிலி ராவே ஆகிய பாடல்கள் இடம்பெற்றுள்ளன.