தான் இயற்றிய சட்டத்தால் தனக்கு தானே மண் அள்ளி போட்டுக்கொண்ட வாரிசு தயாரிப்பாளர்… கர்மா இஸ் பூமராங்க்!!

Varisu
விஜய் நடிப்பில் உருவாகி வரும் “வாரிசு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், குஷ்பு, சரத்குமார், ஷாம், சங்கீதா, யோகி பாபு என பலரும் நடித்துள்ளனர்.

Varisu
“வாரிசு” திரைப்படத்தை வம்சி பைடிப்பள்ளி இயக்கியுள்ளார். தில் ராஜூ இத்திரைப்படத்தை தயாரித்துள்ளார். இத்திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாக உள்ளது. தெலுங்கில் “வரசுடு” என்ற பெயரில் வெளிவருகிறது.
வாரிசு VS துணிவு
விஜய்யின் “வாரிசு” திரைப்படமும் அஜித்தின் “துணிவு” திரைப்படமும் ஒரே நாளில் மோதவுள்ளது. கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் கழித்து அஜித்-விஜய் திரைப்படங்கள் மோத உள்ளதால் ரசிகர்கள் இத்திரைப்படங்களுக்காக வெறிக்கொண்டு காத்திருக்கின்றனர்.

Varisu vs Thunivu
உதயநிதி ஸ்டாலின்
அஜித்தின் “துணிவு” திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் உரிமையாளர் உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார். அதே போல் “வாரிசு” திரைப்படத்தை செவன் ஸ்கிரீன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் லலித் வெளியிடுகிறார்.
“வாரிசு” திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலினே வெளியிடுவார் என்ற பேச்சுக்கள் எழுந்து வந்தன. எனினும் “வாரிசு” திரைப்படத்தை லலித் குமார்தான் வெளியிடுவதாக உறுதியாகியுள்ளது.
“வாரிசு” படத்திற்கு வந்த சிக்கல்
“வாரிசு” திரைப்படத்தை தயாரித்த தில் ராஜூ, தெலுங்கு திரைப்பட உலகில் மிகப் பிரபலமான தயாரிப்பாளர் ஆவார். ‘வாரிசு” திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் மகர சங்கராந்தியை முன்னிட்டு அதிக திரையரங்குகளில் வெளியிட தில் ராஜூ முடிவு செய்திருந்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்துக்கு வாய்ப்பு வாங்கித் தந்த பேர் தெரியாத நபர்… வாலிக்கு அடித்த யோகத்தை பாருங்க!!

Dil Raju
ஆனால் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர்கள் பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு சினிமாக்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் மகர சங்கராந்தி அன்று தெலுங்கில் பாலகிருஷ்ணா, சிரஞ்சீவி ஆகியோரின் திரைப்படங்கள் வெளியாகின்றன. இதனால் “வாரிசு” படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளது.
தில் ராஜூ தான் காரணம்
“வாரிசு” திரைப்படம் இப்படிப்பட்ட சிக்கலை சந்திக்க நேர்ந்ததற்கு அத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜுவே தான் காரணம் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம்!

Dil raju
அதாவது கடந்த 2019 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” திரைப்படம் தெலுங்கில் வெளியான போது. “பண்டிகை காலங்களில் நேரடி தெலுங்கு திரைப்படங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும்” என்ற கருத்தை அப்போது சட்டம் போட்டவர் இதே தில் ராஜுதான். இப்போது “வாரிசு” திரைப்படத்திற்கு வந்த இதே சிக்கல்தான் அப்போது “பேட்ட” படத்திற்கும் வந்தது. இவ்வாறு அப்போது தில் ராஜு செய்த செயல், இப்போது அவருக்கே எதிராக வந்து நிற்கிறது.