Karma Webseries: தமிழ் சினிமாவிற்கு மட்டுமல்லாமல் ரசிகர்கள் பல மொழிகளிலும் ரசிகராக இருப்பார்கள். அப்படி ஒரு வெப் சீரிஸாக கர்மா வரவேற்பு பெற்று வருகிறது. கதை என்ன எப்படி பார்க்கலாம் என்பது குறித்த ஆச்சரிய அப்டேட்.
ஒரு சிக்கலான கதையை வெறும் 6 முதன்மை கேரக்டர்கள் இரண்டு துணை கேரக்டர்கள். இவர்களை வைத்துக் கொண்டு செம்மையான திரைக்கதை அமைத்து வந்திருக்கும் வெப் சீரிஸ்தான் கர்மா. ஹீரோ தன்னுடைய அப்பாவுக்கு இன்சூரன்ஸ் இருக்கிறது.
இருக்கும் கடனுக்காக அவரை கொன்றால் வரும் இன்சூரன்ஸ் பணத்தில் இருந்து தன்னுடைய கடன் பிரச்சினையில் இருந்து மீளலாம் என நினைத்து போடும் திட்டமே இந்த வெப் சீரியஸின் கதை.
ஒரு மைய கதையை எடுத்துக் கொண்டு, அதில் மற்ற நபர்கள் சரியாக இணைத்து அதனால் வெடிக்கும் பிரச்சனையை நேர்த்தியாக சொல்லி இருக்கின்றனர். கதையின் முன்னணி கேரக்டரில் நடிக்கும் நடிகர்கள் சூப்பராக பொருந்தி இருக்கிறார்கள்.

இதனால் வெப் சீரிஸின் மீது இன்னும் ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. மற்றொன்று இந்த சீரியஸிற்கு கர்மா என்ற தலைப்பைத் தவிர வேற எந்த தலைப்பும் செட்டாகி இருக்காது. அவ்வளவு பக்காவான டைட்டில். இருந்தும், இந்த வெப் சீரிஸை குடும்பத்துடன் பார்க்க முடியாது.
அதுபோக இது ஸ்லோ பர்ன் திரில்லரும் இல்லை. பரபர திரில்லர் இல்லை. சூப்பராக பார்க்க நல்ல எண்டெர்டெயின்மெண்ட் தான். நெட்பிளிக்ஸ் ஓடிடியில் இருக்கும் இப்படம் தமிழ் டப்பிங்கிலும் உள்ளது.
கொரியன் சீரிஸ் ஃபேன்ஸுக்கு இது செம கியாரண்டி. 6 எபிசோட் என்பதால் எல்லாருமே ஒரே நேரத்தில் உட்கார்ந்து பார்த்துவிடலாம்.