கார்த்தி 27 பட பூஜை!.. சிவகுமார் முதல் சூர்யா வரை யாரெல்லாம் வந்துருக்காங்க பாருங்க!..

Published on: February 24, 2024
---Advertisement---

நடிகர் கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான ஜப்பான் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியை சமாளிக்க அடுத்து அவர் நடித்துக் கொண்டிருந்த படத்தை பாதியில் நிறுத்தி விட்டு 96 படத்தை இயக்கிய பிரேம் குமார் இயக்கத்தில் அவசர அவசரமாக ஒரு படத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.

அந்த படத்திற்கு மெய்யழகன் என டைட்டில் வைத்துள்ளனர். ஆல் இன் ஆல் அழகுராஜா போல டைட்டில் செம மொக்கையாக இருக்கே என ரசிகர்கள் கலாய்க்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், எப்போதோ பட பூஜை போட்டு ஆரம்பித்து படமே நிறைவடைய உள்ள நிலையில், தற்போது பட பூஜை வீடியோவை 2டி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: ரீரிலிஸ் பரிதாபங்கள்!.. சினிமா தியேட்டர இப்படி K Tv மாதிரி ஆக்கி விட்டுடீங்களேயா!.. ரசிகர்கள் கலாய்!

கார்த்தியின் 27 படம் என்றே அறிவித்து வருகின்றனர். கார்த்தி, சூர்யா, சிவகுமார், அரவிந்த் சாமி, ஜெய் பிரகாஷ் உள்ளிட்ட பிரபலங்கள் பட பூஜையில் பங்கேற்றுள்ளனர். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா நடித்து வருகிறார்.

படத்தின் சூட்டிங் நிறைவடைய உள்ள நிலையில், மே மாதம் படம் வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 96 படத்தின் வெற்றிக்குப் பிறகும் கூட பிரேம் குமாருக்கு எந்தவொரு படமும் கிடைக்காத நிலையில், கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் படத்தை அவர் இயக்கி உள்ளார்.

இதையும் படிங்க: ரசிகர்களை கவர்ந்த நவராத்திரி… சிவாஜி 9 வேடங்களில் நடிக்க காரணமே இதுதான்!..

விஜய்சேதுபதி, திரிஷாவுக்கு நல்ல ஹிட் படத்தைக் கொடுத்த பிரேம் குமார் என்பதால் மட்டுமே இந்த படத்திற்கு லேசாக ஹைப் உள்ளது என்றும் அமீர் பிரச்சனையில் சூர்யா குடும்பமே அமைதி காத்து வருவதால் ரசிகர்கள் கார்த்தியின் அடுத்த படத்தின் மீது பெரிதாக ஆர்வம் செலுத்தாமல் இருப்பதாக கலாய்த்து வருகின்றனர்.

 

Saranya M

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.