கார்த்தியின் முதல் படம் பருத்திவீரன் இல்லை... அதுக்கு முன்னரே ஒரு படத்தில் நடித்திருக்கிறார் தெரியுமா?
நடிகர் கார்த்தி நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த பருத்திவீரன் படத்திற்கு முன்னரே அவர் ஒரு படத்தில் நடித்திருக்கிறார் என்ற சுவாரஸ்ய தகவல்கள் உங்களுக்காக.
கார்த்தி இந்த நிலைக்கு அவ்வளவு ஈசியாக வந்துவிடவில்லை. இன்ஜினியரிங் முடித்ததும் சென்னையில் பணிபுரிந்து கொண்டிருந்த கார்த்தி, மேற்படிப்பிற்காக வெளிநாடு சென்றார். தொடர்ந்து, நியூயார்க்கில் அவருக்கு புகழ்பெற்ற பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தது. அதில் படித்துக்கொண்டிருக்கும் போதே, திரைப்பட தயாரிப்பு குறித்தும் படித்து வந்தாராம்.
ஒருமுறை விடுமுறைக்காக ஊருக்கு வந்தவர். காசி படத்தினை பார்த்து இருக்கிறார். அதை பார்த்ததும், கார்த்திக்கு சினிமா மோகம் அதிகரித்து விட்டதாம். உடனே, ஊருக்கெல்லாம் போக முடியாது. நான் நடிக்க போகிறேன். என்ன விடுங்கப்பா என சிவகுமாரிடம் சண்டை போட்டு இருக்கிறார்.
இந்நிலையில், சிவகுமார் அவரை முதலில் படித்து முடித்து விட்டு வா பார்த்து கொள்ளலாம் என அனுப்பி விட்டார். தொடர்ந்து, சென்னை திரும்பிய கார்த்தி மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்தார். தொடர்ந்து அவரின் ஆயுத எழுத்து படத்திலும் பணியாற்றினார். அந்த படத்தில் சூர்யா காட்சிகளில் ஒரு சிலவற்றில் கார்த்தியும் நடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.