பம்மிய சிங்கம்.. சிறுத்தையாவது சீறுமா? ‘கங்குவா’வை பார்த்துமா இந்த முடிவுக்கு வந்தாரு கார்த்தி?

by Rohini |   ( Updated:2025-03-31 06:18:01  )
karthi 1
X

karthi 1

கங்குவா படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா என்ன ஆனாரு என்பதே தெரியவில்லை. அவரை பற்றி எந்தவொரு அப்டேட்டும் இதுவரை வெளியாக வில்லை. ஆனால் எப்படியாவது அஜித் அவருக்கு கண்டிப்பாக வாய்ப்பு கொடுப்பார் என்றுதான அனைவரும் வெயிட் பண்ணிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அதுதான் இல்லை. மீண்டும் சூர்யா குடும்பம்தான் அவரை மீட்டெடுக்க போகிறது.

ஆம் கார்த்தியின் மூலம்தான் இந்த சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார் சிறுத்தை சிவா. அவரை சிறுத்தை என்ற ஒரு பெரிய கமெர்ஷியல் ஹிட் படத்தை கொடுத்தார் சிவா. கார்த்தியின் கெரியரில் மிகவும் முக்கியமான படமாகவும் சிறுத்தை படம் விளங்குகிறது. அதன் பிறகு அஜித்தை வைத்து தொடர்ந்து மூன்று படங்களை கொடுத்தார் சிறுத்தை சிவா. அந்த மூன்று படங்களுமே ஹிட் படங்களாகவும் மாறியது.

சமீபத்தில் சூர்யாவை வைத்து கங்குவா என்ற ஒரு பெரிய பட்ஜெட்டில் படத்தை கொடுக்க அந்தப் படத்தின் ரிசல்ட் என்னாச்சு என்பது அனைவருக்குமே தெரியும். சூர்யாவின் கெரியரில் பெரிய டிஸ் ஆஸ்டர் படமாக அது மாறியது. ஆனால் சூர்யா அந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்தார் என்றுதான் சொல்ல வேண்டும். எந்தளவு மெனக்கிட்டார் என்பதை அந்தப் படத்தை பார்க்கும் போதே நமக்கு தெரியும்.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கங்குவா படத்திற்காக வேறு எந்த படத்திலும் கமிட் ஆகாமல் இருந்தார் சூர்யா. ஆனால் படம் பெரிய தோல்வியை சந்தித்தது. இது சிறுத்தை சிவாவுக்கும் பேக் ஃபைராக மாறியது. அதன் பிறகு அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படத்தை எடுக்க போகிறார் என்ற தகவல் வெளியானது. ஆனால் சமீபத்தில் வெளியான தகவலின் படி மீண்டும் கார்த்திதான் சிறுத்தை சிவாவுக்கு வாய்ப்பு கொடுக்க இருக்கிறாராம்.

siva

அதுவும் ஒரு எமோஷனல் டிராமாவாகத்தான் இந்த படத்தை எடுக்கப் போவதாக ஒருதகவல் கிடைத்துள்ளது. என்ன இருந்தாலும் தான் அறிமுகப்படுத்திய ஒரு இயக்குனர். மீண்டும் அவரை பாதாளத்தில் இருந்து தூக்கிவிட வேண்டிய ஒரு பொறுப்பில் இருக்கிறார் கார்த்தி. ஏற்கனவே கார்த்தியின் லைன் அப்பில் ஏகப்பட்ட படங்கள் இருப்பதால் சிறுத்தை சிவா மற்றும் கார்த்தி காம்போவில் அந்தப் படம் எப்போது உருவாக போகிறது என்பதை பற்றி தகவல் கூடிய சீக்கிரம் வெளியாகும் என்று தெரிகிறது.

Next Story