கங்குவாவை தொடர்ந்து மீண்டும் கேமியோவில் இறங்கும் கார்த்தி.. அதுவும் இந்தப் படத்துலயா?

karthi 2
Karthi: தற்போது கார்த்தி வா வாத்தியாரே என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. அந்தப் படத்திற்கு பிறகு இப்போது சர்தார் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார். சமீபத்தில்தான் சர்தார் 2 படத்தின் டீஸர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
ஹாலிவுட் தரத்தில் இந்தப் படத்திற்கான சண்டைக் காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டது. சர்தார் 2 படம் மட்டுமில்லாமல் இன்னும் அடுத்தடுத்து கார்த்தியின் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருக்கின்றன. இவரை பொறுத்தவரைக்கும் ஏராளமான புதுமுக இயக்குனர்களை கார்த்திதான் அறிமுகம் செய்திருக்கிறார். அதில் குறிப்பிடத்தக்கவர் அஜித்தின் நண்பரான சிறுத்தை சிவா.
சிறுத்தை படத்தை முதன் முதலில் இயக்கியதன் மூலம் சிறுத்தை சிவா என அறியப்பட்டார். சிறுத்தை சிவா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் கங்குவா. அஜித்தை வைத்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்ததனால் கங்குவா படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது. ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் மோசமான விமர்சனத்தை சந்தித்தது கங்குவா படம்.
இந்தப் படத்தில் கேமியோ ரோலில் கார்த்தியும் நடித்திருப்பார். ஒரே திரையில் சூர்யா கார்த்தி எனும் போது அந்தப் படத்திற்கு இன்னும் ஹைப் அதிகமானது. ஆனால் படம் சந்தித்த விமர்சனம் கார்த்தியின் கேமியோ ரோலையே மறக்க வைத்தது. இந்த நிலையில் மீண்டும் கேமியோ ரோலில் ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. அதுவும் தெலுங்கில் நானி நடிக்கும் ஒரு படத்தில் கேமியோ ரோலில் நடிக்க இருக்கிறாராம்.

ஏற்கனவே நானி நடித்து ஹிட்டான ஹிட் 2 படத்தின் அடுத்த பாகமான மூன்றாம் பாகத்தில் கார்த்தியின் கேமியோ அறிமுகம் கொடுத்து ஹிட் படத்தின் நான்காம் பாகத்தில் அவருக்கான முக்கியத்துவம் இருக்கும் என சொல்லப்படுகிறது. இது எந்த வகையில் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.