மணிரத்னம் மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள்.. மீண்டும் இணைந்த பொன்னியின் செல்வன் தோஸ்த்.. ஓ அப்படியா?

by Saranya M |   ( Updated:2024-03-11 10:16:54  )
மணிரத்னம் மந்தையில் இருந்து பிரிந்த ஆடுகள்.. மீண்டும் இணைந்த பொன்னியின் செல்வன் தோஸ்த்.. ஓ அப்படியா?
X

ஒரே நேரத்தில் ஒரே லுக்கில் நடிகர் கார்த்தி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 96 படத்தின் இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் ”மெய்யழகன்” எனும் படத்தில் நடித்து வரும் கார்த்தி அப்படியே அங்கிருந்து கட் செய்தால், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வரும் “வா வாத்தியாரே” படத்தில் நடித்து வருகிறார்.

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மூத்த மகனான சூர்யா சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வரும் நிலையில், மணிரத்னத்தின் உதவி இயக்குநராகத்தான் கார்த்தி தனது சினிமா பயணத்தை ஆரம்பித்தார்.

இதையும் படிங்க: மகன் வயது நடிகருடன் மஜா பண்ணும் பிரபல நடிகை!.. அந்த நடிகையோட சேர்ந்து சுத்துறாரே நயன்தாரா!..

மணிரத்னம் போல இயக்குநராக வேண்டிய கார்த்தியை பருத்தி வீரன் படம் பண்ணலாம் வா என அழைத்து வந்தது இயக்குநர் அமீர் தான். ஆனால், முதல் படம் முடியும் முன்பே அவருடன் சண்டை வந்து பிரிந்து விட்டனர்.

பல வருடங்கள் கழித்து காற்று வெளியிடை படத்தின் மூலம் மீண்டும் மணிரத்னம் மந்தையில் சேர்ந்த கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தில் முக்கியமான ஹீரோ கதாபாத்திரமான வந்தியத்தேவனாகவே நடித்திருந்தார்.

இதையும் படிங்க: ஜெயிலர் 2வா?.. உருட்டுருவன் ஆயிரம் உருட்டுவான்.. ரஜினி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த நெல்சன்!..

அந்த படத்தில் கார்த்தி உடன் இணைந்து டைட்டில் ரோலான பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி மறுபடியும் தற்போது கார்த்தியை சந்திக்கும் சூழல் உருவாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் வா வாத்தியாரே படத்தின் படப்பிடிப்பும், ஜெயம் ரவி நடித்து வரும் பெரிய பட்ஜெட் படமான ஜீனி படத்தின் படப்பிடிப்பும் தற்போது ஒரே இடத்தில் நடைபெற்று வருவதால் மீண்டும் இரு தோஸ்த்தும் ஒன்றாக கூடி பேசி அரட்டை அடிக்க வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

Next Story