இதுக்குப் போய் அல்பத்தனமா அலைஞ்ச நடிகர் கார்த்தி..! அது என்ன மாப்பு வெட்கப்படாம சொல்லிட்டீங்க..
தமிழ் சினிமாவில் அண்ணன் தம்பிகளாக மாறிமாறி மாஸ் காட்டி வருபவர்கள் நடிகர் சூரியா மற்றும் நடிகர் கார்த்தி. அப்பாவின் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் இருவரும்.ஆனாம் சூரியா ஆரம்பத்தில் நடித்திருந்தாலும் அமெரிக்கா ரிட்டர்னாக பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலூன்றி வைத்தார்.
வந்த முதல் படத்திலயே அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்தார். நல்லா இறங்கி நடித்திருப்பார். இவரின் இந்த படத்தை தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் கமிட் ஆகி இன்றளவும் தனக்கென்று ஒரு வரையறை வகுத்து நடித்து வருகிறார்.
இவரின் அடுத்த படமான சர்தார் படம் சூட்டிங் போய்க்கொண்டிருக்க இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார். இந்த படத்தின் அப்டேட்ஸும் இணையத்தில் வந்த வண்ணம் தான் இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க இவர் அடிக்கடி சென்னையிலுள்ள உட்லண்ட் டிரைவ் ஓட்டலுக்கு சென்று தோசை சாப்பிடுவது வழக்கமாம். அங்கு உள்ள தோசை அவ்ளோ ருசியா இருக்குமாம். நடிகர்கள் முக்கால் வாசி பேர் அங்குதான் சாப்பிடுவார்களாம்.
இப்பொழுது அது செம்மொழி பூங்காவாக மாறியுள்ளதால் அதே மாதிரி தோசை எங்கேயாவது இருக்கானு தேடிகொண்டு இருந்துள்ளாராம். அதை கண்டுபிடித்து விட்டேன், எக்மோரில் அசோக ஓட்டலில் உள்ளது என ட்விட் போட்டு தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.