கார்த்தியின் கோபத்திற்கு ஆளான சூர்யா...! கடைசில எங்க போய் முடிஞ்சிருக்கு பாருங்க...
இன்று சூர்யாவின் தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் ’விருமன்’. இந்த படத்தை சூர்யாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி நிறுவனம் தான் தயாரித்திருக்கிறது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதீதி சங்கர் நடித்திருக்கிறார்.
படம் கிராமத்து மண்வாசனையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது. ஏற்கெனவே இதே கதைகளத்தோடி கொம்பன், பருத்திவிரன் போன்ற படங்களில் நடித்திருக்கும் கார்த்தி இந்த படத்திலும் அதே கெட்டப்பில் தான் வந்திருக்கிறார். படம் இதுவரைக்கும் நல்ல விமர்சனங்களையே பெற்று வருகிறது.
இந்த நிலையில் சூர்யா கார்த்தியை பற்றி ஒரு சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதாவது கொரானா லாக்டவுனில் கார்த்தி நீளமான தலைமுடியோடுதான் இருந்தாராம். லாக்டவுனில் ஏராளமானோர் வெட்டியாக தான் பொழுதை கழித்தனர். அந்த வகையில் சூர்யாவும் சும்மாதான இருக்கிறோம் என்று அவரும் நீளமான தலைமுடியோடு இருந்துள்ளார்.
இதை பார்த்ததும் கார்த்தி என்னை பார்த்து தான் நீயும் வைச்சுருக்க , ஒழுங்கா போய் வெட்டு என்று கூற சூர்யா கலாய்த்து விட்டு போய்விட்டாராம். அந்த நேரம் ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் சூர்யாவை பார்த்ததும் சார் என்னோட ஒரு படத்தில் இப்படி பட்ட தோற்றம் தான் வேணும். நல்ல வேளையா போச்சு என அந்த வகையில் வந்த வாய்ப்புதான் ஜெய்பீமாம். இதை அறிந்த கார்த்தி சூர்யாவிடம் பாத்தீயா முடி வைக்காதே-னு சொன்னேன். உனக்கு படவாய்ப்பு வந்துருச்சு-னு சும்மா பேசிவிட்டு போனாராம்.