ஓ அதுல அண்ணன் வீக்கா?.. ‘ஆயுத எழுத்து’ படத்தில் சூர்யாவிற்கு உதவி செய்த கார்த்தி!..

by Rohini |
surya
X

surya

தமிழ் சினிமாவில் கலைக்குடும்பங்களாக திகழ்பவர் நடிகர் சிவக்குமார் குடும்பம் தான். சிவக்குமார் முதல் சூர்யா , கார்த்தி வரை இதில் அவர் மருமகளான ஜோதிகாவும் சினிமாவில் சாதித்தவர் தான். சிவக்குமார், சூர்யா, கார்த்தி, ஜோதிகா ஆகிய நான்கு பேருமே சினிமாவில் தனக்கான முத்திரையை பதித்தவர்கள் தான்.

surya1

surya karthi

இதில் சூர்யா சினிமாவை பற்றி எதுவுமே தெரியாமல் தான் இந்த துறைக்குள் வந்திருக்கிறார். ஆரம்பத்தில் நடிக்கக் கூட தெரியாத ஒரு சாதாரண பையனாகத்தான் இவரின் என்ரி இருந்திருக்கிறது. ஆனால் இன்று ஒரு தேசிய விருதை தட்டிச் செல்லும் மாபெரும் கலைஞனாக உருவெடுத்திருக்கிறார் என்றால் அவரின் கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றியே ஆகும்.

ஆனால் இவருக்கு நேர் மாறாக இருந்தவர் தான் கார்த்தி. அமெரிக்காவில் படித்து வளர்ந்தாலும் இவரின் என்ரி உதவி இயக்குனராக அதுவும் மணிரத்னத்திடம் இருந்து தான் இவரின் பயணம் ஆரம்பித்திருக்கிறது.மணிரத்னம் இயக்கிய ‘ஆயுத எழுத்து’ படத்தில் தான் கார்த்தி உதவி இயக்குனராக பணிபுரிய ஆரம்பித்தார்.

surya2

surya karthi

அந்தப் படத்தில் சூர்யா உட்பட சித்தார்த், மாதவன் போன்ற பல நடிகர்கள் நடித்து வெளியான படம். அந்தப் படத்தில் நடந்த சில சுவாரஸ்ய சம்பவங்களை அந்தப் படத்தில் பணிபுரிந்தவரும் இயக்குனருமான கண்ணன் என்பவர் கூறினார். அந்த சமயத்தில் தான் கார்த்தி அமெரிக்காவில் படிப்பை முடித்து நேராக மணிரத்தினத்திடம் அஸிஸ்டெண்டாக சேர்ந்தாராம்.

ஏற்கெனவே சூர்யாவும் அந்தப் படத்தில் நடித்ததால் சூர்யாவின் காட்சிகள் முடிந்ததும் சூர்யா கார்த்தியிடம் எல்லாம் ஓகே வா என்று கேட்பாராம். மேலும் மணிரத்னம் எப்பவும் ஆங்கிலம் கலந்த தமிழில் தான் பேசுவார். அவரின் ஆங்கிலம் சரளமாக இருந்ததால் சில சமயங்களில் அவர் சொன்ன வார்த்தைகள் சூர்யாவிற்கு புரியாதாம்.

surya3

surya3

அதை தம்பி கார்த்தியிடம் தான் மணிரத்னம் என்ன சொல்கிறார் என்று கேட்பாராம். ஏனெனில் கார்த்தி அமெரிக்காவில் படித்ததால் அவருக்கு மிக எளிதாக புரிந்திருக்குமாம். இந்த மாதிரியான பல உதவிகளை ஆயுத எழுத்து படத்தின் படப்பிடிப்பு சமயத்தில் கார்த்தி சூர்யாவிற்காக செய்திருக்கிறாராம்.

இதையும் படிங்க : எம்ஜிஆர் என்னை கல்யாணம் பண்ணிக்கிறியான்னு கேட்டார்!.. போட்டு உடைத்த பெண் இயக்குனர்…..

Next Story