Connect with us
banner

விஜய் கதைய முடிச்சாச்சு., அடுத்த குறி அஜித் தான்.! இணையத்தை அலறவிட்ட சிறுத்தை கார்த்தி.!

Cinema News

விஜய் கதைய முடிச்சாச்சு., அடுத்த குறி அஜித் தான்.! இணையத்தை அலறவிட்ட சிறுத்தை கார்த்தி.!

தமிழ் சினிமாவில் முதல் படத்திலேயே வெற்றி பெற்ற ஹீரோக்கள் என்பது இங்கு வெகு சிலரே, ஆனால், முதல் படமான பருத்தி வீரன் மூலம் இமையம்  தொட்ட ஹீரோ என்றால் அது கார்த்தி தான். இன்று வரை அவராலேயே அந்த வெற்றியை எட்டி தொட முடியவில்லை.

இவர் வருடத்திற்கு ஒரு படம் என நல்ல கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். தனது கதைகளங்கள் மீது நம்பிக்கை வைத்து பெரிய ஹீரோ படங்களுடன் மோத விட்டு வெற்றி பெற்று வருகிறார்.

அப்படி தான் தளபதி விஜய் நடித்த காவலன்  திரைப்படம் 2011 பொங்கல் தினத்தில் வெளியானது . அதே தேதியில் ரத்னவேல் பாண்டியனாக ‘சிறுத்தை’ படத்தில் சீறி பாய்ந்திருந்தார் கார்த்தி. அப்போது காவலன் சூப்பர் ஹிட் என்றால் சிறுத்தை மெகா ஹிட்.

அடுத்ததாக 2019 தீபாவளிக்கு தளபதி விஜயின் பிகில் உடன் கைதி திரைப்படத்தை களமிறங்கினார் கார்த்தி. பிகில் திரைப்படம் வசூல் ரீதியில் பெரிய வெற்றி பெற்றாலும், கைதி திரைப்படம் நாட்கள் கூட கூட ரசிகர்களின் எண்ணிக்கையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்று பெரிய வெற்றியை பெற்றது. கார்த்திக்கு முதல் 100 கோடி படமாகவும் அமைந்தது.

இதையும் படியுங்களேன் – இவருக்கு வந்த வாழ்வை பாருங்க.., பாரதிராஜா, சத்யராஜ் இவர்களுடன் நடிக்கும் ஜி.பி.முத்து.!

தற்போது கார்த்தி நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் தயாராகியுள்ள சர்தார் படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுளள்து. அதே தேதியில் தான் அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் தயாராகும் AK61 திரைப்படம் ரிலீஸ் ஆகும் என கூறப்படுகிறது. விஜய், அஜித் என யாரு படம் வந்தால் என்ன தனது படத்தின் மீது நம்பிக்கை வைத்து தைரியமாக களமிறக்கி வருகிறார் கார்த்தி.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top