Connect with us

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது…முதல்ல படத்த ரிலீஸ் பண்ணுங்க…! பேன் இந்தியாவுக்காக பாடாய் படும் நடிகர் கார்த்தி..!

karthi_main_cine

Cinema News

ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது…முதல்ல படத்த ரிலீஸ் பண்ணுங்க…! பேன் இந்தியாவுக்காக பாடாய் படும் நடிகர் கார்த்தி..!

 தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. இவர் கடைசியாக நடித்து வெளியான படம் சுல்தான். அந்த படம் சரியான வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை. மேலும் அந்த படத்திற்கு பிறகு வேறெந்த படங்களும் இதுவரை வெளிவரவில்லை. ஆனால் கைவசம் 4-5 படங்களை வைத்துச் சுற்றிக் கொண்டு இருக்கிறார்.

karthi1_cine

மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன், சூர்யா தயாரிப்பில் விருமன், மித்ரன் இயக்கத்தில் பிரின்ஸ் பிக்சர்ஸ் சர்தார் போன்ற படங்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் விநாயகர் சதுர்த்தி திருநாளில் தன்னுடைய விருமன் படம் ரிலீஸ் ஆகும் என படதரப்பிலிரிந்து தெரிவித்தார்கள். ஆனால் அதற்கு முன்பாகவே சர்தார் படத்தை ரிலீஸ் செய்வதாக மித்ரன் படக்குழு தெரிவித்திருந்தது.

karthi2_cine

ஆனால் கார்த்தி என்ன நினைத்தாரோ தன் அண்ணன் தயாரிப்பில் உருவான படமான விருமன் படம் முதலில் ரிலீஸ் செய்யப்பட்டு அதன் பிறகு சர்தாரை வெளியிடலாம் என கூறியிருக்கிறாராம். இதனிடையில் இந்த படங்கள் எல்லாம் வெளியான பிறகு மீண்டும் மித்ரன் இயக்கத்தில் படம் பண்ணப் போகிறாராம் நடிகர் கார்த்தி. இதில் கார்த்தியும் மித்ரனும் பள்ளி நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

karthi3_cine

ஆனால் மீண்டும் மித்ரனுடம் சேரும் நேரத்தில் அதற்கிடைப்பட்ட காலத்திற்குள் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் கார்த்தி இணையப்போகிறார். அது ஒரு பெரிய பட்ஜெட்டி உருவாகும் பேன் இந்தியா படமாக இருக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியானது.படம் முழுக்க தென் ஆப்பிரிக்காவில் நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்துவதால் படக்குழு தென் ஆப்பிரிக்காவிற்கு விரைவில் படையெடுப்பார்கள் என தெரிகிறது. எல்லாம் சரி, படத்தை எங்கயா? அதற்குள் பேன் இந்தியா தென் ஆப்பிரிக்கானு சுற்றாதீங்க, எடுத்த படத்தை ரிலீஸ் பண்ணுங்க என்று ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top