எத்தனை தடவ தான் அந்த போதை பொருளை பிடிக்க போறீங்க.?! கடுப்பேற்றிய கார்த்தி.!

by Manikandan |
எத்தனை தடவ தான் அந்த போதை பொருளை பிடிக்க போறீங்க.?! கடுப்பேற்றிய கார்த்தி.!
X

நடிகர் கார்த்தி திறமையான இளம் இயக்குனர்களை அடையாளம் கண்டு அவர்கள் படத்தில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து வருகிறார். அதேபோல் அவரை வைத்து இயக்கும் இயக்குனர்கள் அடுத்தடுத்து பெரிய வாய்ப்புகளை பெற்று செல்கின்றனர். அந்த வரிசையில் பா ரஞ்சித், H.வினோத், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் உள்ளனர்.

தற்போது அடுத்ததாக ஓர் இளம் இயக்குனர் இயக்கத்தில் கார்த்தி நடிக்க உள்ளாராம். கனா படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் கார்த்தியிடம் ஒரு கதை கூறியுள்ளாராம். அந்த படத்தில் நடிக்க கார்த்திக் ஓகே சொல்லிவிட்டாராம்.

இதையும் படியுங்களேன் - சமந்தா முன்னாள் கணவரின் புதிய ஜோடி அந்த நடிகையா?! லீக் ஆன தகவல்.!

இந்த படத்தின் கதை என்னவென்றால் சர்வதேச அளவிலான போதை பொருள் கும்பலை பற்றிய கதையாம். அதற்காக சில வருடங்கள் அந்த போதை பொருள் சர்வதேச கும்பல் பற்றி அருண்ராஜா காமராஜ் சில ஆய்வுகளை மேற்கொண்டு கதைக்களத்தை தயார் செய்துள்ளாராம்.

ஏற்கனவே தமிழ் சினிமாவில் பல்வேறு போதைப்பொருள் கடத்தல் பற்றிய திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. அதில் சிலவை ஹிட்டடித்துள்ளன கிடைத்துள்ளன. அதேபோல இந்த படமும் வெற்றி பெறுமா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Next Story