இவர் செட்டுல இருந்தா செல்போனை தொட மாட்டேன்.. கார்த்தி சொன்ன நடிகர்

karthi
இன்று கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் சர்தார் 2 படத்தின் டீஸரை அதிரடியாக இறக்கியுள்ளது படக்குழு. பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் சர்தார். இந்தப் படம் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்க படக்குழு திட்டமிட்டார்கள்.
பொதுவாக கார்த்தியை பொறுத்தவரைக்கும் பெரும்பாலும் இரண்டு பாகங்களாக தயாராகும் படங்களில் நடித்து வருகிறார். சர்தார் 2 படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன் , ரெஜிஷா விஜயன், ஆஷிகா என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். படத்தின் டீஸர் மிகப்பிரம்மாண்டமாக இன்று வெளியாகியிருக்கிறது.

ஹாலிவுட் தரத்தில் இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் அமைந்திருக்கின்றன. கார்த்தியின் படங்களில் பெரும்பாலும் ஏதாவது ஒரு வித்தியாசமான முயற்சியை இயக்குனர் கையாண்டிருப்பார். அந்த வகையில் மித்ரன் இந்தப் படத்தில் எப்படிப்பட்ட கதையை படமாக்கியிருக்கிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஜப்பானில்தான் படமாக்கியிருக்கிறார்கள்.
படத்தின் சண்டைக்காட்சிகளில் மிகவும் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறாராம் கார்த்தி. ஒரு படத்தின் இரு துருவங்கள் வலிமையாக இருந்தால்தான் அந்தப் படம் பார்க்கும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் எஸ்.ஜே. சூர்யா இந்தப் படத்தில் வந்தது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என கார்த்தி இன்று டீஸர் வெளியீட்டு விழாவில் கூறினார்.

மேலும் எஸ்.ஜே. சூர்யா செட்டில் இருக்கிறார் என்றால் நான் மொபைல் போனையே எடுக்க மாட்டேன். அந்தளவுக்கு அவருக்கு தெரிந்த விஷயங்கள் ஏராளம். அதை பற்றி நிறைய ஷேர் செய்வார் எஸ்.ஜே. சூர்யா என கார்த்தி அந்த மேடையில் கூறினார்.