கார்த்தியை 300 கிலோமீட்டர் ஓடவிட்ட ஸ்டண்ட் மாஸ்டர்... எந்தப்படத்திற்கு என்று தெரியுமா?

by sankaran v |
Karthi
X

Karthi

ஆக்ஷன் படங்களில் தான் ஒரு ஹீரோ அடுத்த லெவலுக்குச் செல்கிறார். அதனால் அது போன்ற படங்களில் அர்ப்பணிப்பு காட்டுவதற்கு நடிகர்கள் தயங்க மாட்டார்கள். அவர்களில் ஒருவர் தான் கார்த்தி. இவர் நடிப்பில் மெருகேறிய சில ஆக்ஷன் படங்கள் பற்றியும், அதற்காக அவர் காட்டிய அர்ப்பணிப்பையும் பற்றிப் பார்ப்போம்.

கார்த்தி நடித்த நான் மகான் அல்ல படத்தில் சண்டைக்காட்சிகள் செம மாஸாக இருக்கும். படத்தில் கிளைமாக்ஸில் கார்த்தியின் நடிப்பு செமயாக இருக்கும். சண்டைக்காட்சியில் வெளுத்து வாங்கியிருப்பார். வில்லன்களை அடித்து துவம்சம் செய்வார். அவர்களை அங்கேயே குழி தோண்டி உயிரோடு புதைப்பார். இந்த சண்டையில் சிலருக்கு ரத்த காயங்கள் உண்டானதாம்.

TA1

TA1

கைதி படத்தில் பாடல்களே கிடையாது. கதாநாயகியும் இல்லை. ஆனால் படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் என்பதால் விறுவிறுப்பாகப் போகும். படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதையே சவாலாக எடுத்துக் கொண்டு சிறப்பாகக் கொடத்தார். சண்டைப்பயிற்சியாளர்களாக அன்புமணி, அறிவுமணி என்ற இரட்டையர்கள் இருவரும் 50 நாள்களுக்கும் மேலாக படத்தில் பணியாற்றினார்களாம். இந்தப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து அவர்கள் இப்படி சொன்னார்கள். ஒரு சீன்ல கூட கார்த்தி சாருக்கு டூப்பே கிடையாது.

நாங்க ரிகர்சல் செய்யும் நேரத்தில் கூட எங்க பக்கத்திலேயே இருப்பார். தூசி அதிகமாக பறக்குது சார். நீங்க கேரவனுக்குள்ளே போங்கன்னு சொல்வோம். அதற்கு பரவாயில்லை மாஸ்டர். விழுந்து புரள தானே போறோம். எனக்கொன்னும் பிரச்சனை இல்லை என்று சொல்லியபடி ரொம்பவே டெடிகேஷனோடு நடித்தார் என்றார்கள்.

தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் பணியாற்றிய ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயனும் கார்த்தியின் அர்ப்பணிப்பைப் பற்றி புகழந்து தள்ளியிருக்கிறார். இந்தப்படத்திற்காக கார்த்தியை 300 கிலோ மீட்டராவது ஓட விட்டு இருப்பேன். அவரும் நான் சொன்னதை சளைக்காம செஞ்சாரு. இயக்குனருக்கு பிடித்தது போல காட்சி வர்ற வரைக்கும் கார்த்தி ஓய மாட்டார் என்றார்.

Next Story