சார்பட்டா பரம்பரை படத்தை தவறவிட்ட முன்னணி நடிகர்... நடித்திருந்தால் வேற லெவலில் இருந்திருக்கும்....
என்னதான் தனது அப்பா மற்றும் அண்ணன் சினிமாவில் இருந்தாலும் தனது சொந்த முயற்சி மற்றும் கடின உழைப்பு மூலம் சினிமாவில் முத்திரை பதித்தவர் தான் நடிகர் கார்த்தி. தனது முதல் படமான பருத்திவீரன் படத்திலேயே தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிரூபித்தவர் தான் கார்த்தி. முதல் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்து வந்தார்.
தற்போது டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கார்த்தியின் கைவசம் பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் போன்ற படங்கள் உள்ளன. இந்நிலையில் கார்த்தி நடிக்காமல் தவறவிட்ட ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சென்னையில் நடந்த குத்துச் சண்டை போட்டியை மையமாக வைத்து உருவான படம் தான் சார்பட்டா பரம்பரை படம். ஆர்யா நடிப்பில் உருவான இப்படம் ஓடிடியில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. பல பாராட்டுகளை குவித்த இந்த படம் ஆர்யாவிற்கு சிறந்த நடிகர் என்ற பெயரை பெற்று தந்தது.
இந்நிலையில் சார்பட்டா பரம்பரை படத்தில் ஆர்யா நடித்த கேரக்டரில் முதலில் நடிக்க இருந்தது நடிகர் கார்த்தி தானாம். இயக்குனர் ரஞ்சித்தின் முதல் சாய்ஸாகவும் கார்த்தி தான் இருந்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் சில காரணங்களால் கார்த்தியால் நடிக்க முடியாமல் போகவே ஆர்யா ஒப்பந்தமாகியுள்ளார்.
கார்த்தி ஏற்கனவே ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் படத்தில் நடித்திருந்ததால் சார்பட்டா படத்திலும் கார்த்தியையே நடிக்க வைக்க ரஞ்சித் விரும்பியுள்ளார். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையால் போய்விட்டது. ஒருவேளை இந்த படத்தில் கார்த்தி நடித்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்குமோ என்னவோ. பின்பு சூர்யாவிடமும் பேசினார். அதுவும் நடக்காமல் போனது.
ஆனால் ஆர்யாவும் கபிலன் என்ற கேரக்டரில் ரியலாகவே வாழ்ந்திருந்தார். ஒரு குத்துச்சண்டை வீரராகவே தன்னை உடல் அளவில் மாற்றி படத்திற்காக கடினமாக உழைத்திருந்தார். அவரது உழைப்பிற்கு கிடைத்த வெற்றி தான் படத்திற்கு கிடைத்த பாராட்டுக்கள்.