சர்தார் 2 புரமோ வீடியோ கொல மாஸ்!.. எஸ்.ஜே.சூர்யா சும்மா கலக்குறாரே!…

#image_title
தமிழ் சினிமாவில் இரும்புத்திரை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பி.எஸ்.மித்ரன். இந்த படத்தில் கார்த்தியும், அர்ஜூனும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். செல்போனை டிராக் செய்து எப்படியெல்லாம் மக்களை ஏமாற்ற முடியும் என இந்த படத்தில் காட்டியிருந்தார் மித்ரன். இந்த படம் சூப்பர் ஹிட் அடித்தது.
இந்த படத்திற்கு பின் சிவகார்த்திகேயனை வைத்து ஹீரோ என்கிற படத்தை இயக்கினார். இந்த படத்தில் சொல்லப்பட்ட கதை நாட்டுக்கு தேவையான ஒன்றுதான் என்றாலும் ரசிகர்களை ஈர்க்கவில்லை. எனவே, இப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடிக்கவில்லை. அதன்பின் கார்த்தியை வைத்து சர்தார் படத்தை இயக்கினார் மித்ரன்.
இந்த ராணுவத்தில் மேலதிகாரியாக இருப்பவர்கள் எப்படி சாமானியர்களை உளவு சொல்பவராக பயன்பத்துவார்கள் என்பதை விரிவாகவே இப்படத்தில் காட்டியிருந்தார். இந்த படத்தில் சர்தார் என்கிற வேடத்தில் கார்த்தியும் கலக்கி இருந்தார். அப்பா - மகன் என இரட்டை வேடங்களிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கவே இப்போது இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் காட்சிகளை பல வெளிநாடுகளுக்கும் சென்று எடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருக்கிறார். மேலும், மாளவிகா மோகனன், ஆசிகா ரங்கநாத் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கிறார்.
இந்நிலையில், ரம்ஜானை முன்னிட்டு இந்த படத்தின் புரமோ வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இதில், அதிரடி சண்டைக்காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. சீனாவில் ஒருவரை சர்தார் கார்த்தி கொல்லும் காட்சியும் வருகிறது. புரமோ வீடியோவை பார்க்கும்போது படம் கண்டிப்பாக ஹிட் அடிக்கும் என்றே தோன்றுகிறது.