அந்த விஷயத்தில் சூர்யாவை மிஞ்சும் கார்த்தி! என்ன பெரிய மாஸ்? அண்ணனுக்கு எதிரா கொம்பு சீவுறது இவர்தானா?
Karthi vs Surya: தமிழ் சினிமாவில் சகோதர நடிகர்களாக தங்கள் வெற்றிப்பாதையில் பயணித்துக் கொண்டிருப்பவர்கள் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் கார்த்தி. ஒரு பலமான சினிமா பின்புலத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் சூர்யா மற்றும் கார்த்தியின் நடிப்பு மக்களால் பெருமளவு ரசிக்கப்பட்டு வருகிறது.
அதிலும் குறிப்பாக கார்த்தியின் சமீபகால படங்கள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு காரணம் கார்த்தி தேர்ந்தெடுக்கும் கதைகள் தான் என்று பிரபல பத்திரிக்கையாளர் கூறினார்.
இதையும் படிங்க: ஜவானில் அட்லி செஞ்ச வேலை.. மூடி மறச்சி வெத்து பந்தா காட்டும் ஷாருக்கான்…
அதாவது வரிசையாக கார்த்தியின் கையில் ஜப்பான், நளன் குமாரசாமி இயக்கத்தி ஒரு புதிய படம், அடுத்ததாக் 96 பிரேமுடன் ஒரு புதிய படம் பல படங்களை கொடுத்த இயக்குனர்களுடன் கைகோர்த்திருக்கிறார்.
அதில் ஜப்பான் திரைப்படம் வருகிற தீபாவளி அன்று திரைக்கு வருவதாக கூறப்படுகிறது. ராஜ்முருகன் இயக்கியிருக்கும் இந்த ஜப்பான் திரைப்படம் கண்டிப்பாக ஒரு சமூக கருத்தை உள்ளடக்கிய திரைப்படமாகத்தான் இருக்கும். ஏனெனில் அவரின் படங்கள் ஏதாவது ஒரு வகையில் அரசியல் பேசும் படமாக அமையும் என்பதால் ஜப்பான் படமும் ஓரளவு வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை என்று அந்த பத்திரிக்கையாளர் கூறினார்.
இதையும் படிங்க: சினிமா வரலாற்றிலேயே எடுக்காத ஒரு ஷார்ட்! அதுவும் இந்த நடிகருக்கா? ‘இறைவன்’ பற்றி ஜெயம் ரவி சொன்ன சீக்ரெட்
மேலும் நளன் குமாரசாமி மற்றும் பிரேம் இவர்களும் நிச்சயமாக ஒரு நல்ல படத்தைத்தான் கொடுக்க வாய்ப்பிருக்கிறது. ஆகவே கார்த்தி இப்படி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் போது சூர்யா அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனக்குறைவாகத்தான் இருக்கிறார் என்றும் அந்தப் பத்திரிக்கையாளர் கூறினார்.
ஆனால் கார்த்திக்கு பின்புலமாக இருந்து இந்த கதை தேர்வில் உதவியாக இருப்பது ஒரு வேளை எஸ்.ஆர்.பிரபுவாக கூட இருக்கலாம் என்று கூறினார். ஏனெனில் தொடர்ச்சியாக எஸ்.ஆர்.பிரபுவின் தயாரிப்பில்தான் கார்த்தி படம் பண்ணி வருவதாகவும் ஒரு விதத்தில் கார்த்திக்கு உறவுமுறையாக எஸ்.ஆர்.பிரபு இருப்பதால் அவர்தான் கார்த்திக்கு உதவியாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தையும் எழுப்புகிறது.
இதையும் படிங்க: குறைவான பட்ஜெட்டில் பெத்த லாபம்!. சன் பிக்சர்ஸ் கல்லா கட்டிய 3 திரைப்படங்கள்…
இதை பார்த்த ரசிகர்கள் கார்த்திக்கு எஸ்.ஆர்.பிரபு உறவுமுறையாக இருந்து உதவுகிறார் என்றால் சூர்யாவுக்கும் உறவுமுறைதானே? அப்புறம் ஏன் கார்த்திக்கு மட்டும் அவர் உதவ வேண்டும்? ஒரு வேளை சூர்யாவுக்கு எதிராக கார்த்தியை கொம்பு சீவி விடுகிறாரா எஸ்.ஆர்.பிரபு? என தங்கள் கமெண்ட்களை கூறிவருகிறார்கள்.