புது கதையெல்லாம் செட்டாகல.. பழசையே தூசு தட்டுவோம்.. என்னங்க கார்த்தி இப்படி இறங்கிட்டீங்க..!
Karthi: நடிகர் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் ரிலீஸான எந்த படங்களுமே பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை. இதனால் இனி புது கதை செட்டாகாது என்பதை முடிவு செய்து விட்டார் போல. ஒரு புது ரூட்டை பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இயக்குனராக ஆசைப்பட்ட கார்த்தியை நடிகர் சிவகுமார் தான் ரொம்பவே சமாதானம் செய்து நடிக்க வைத்தாராம். எப்போ வேண்டுமானாலும் இயக்குனராக ஆகலாம். ஆனால் நடிப்பு இப்போ தான் முடியும் என்றாராம். அதை தொடர்ந்தே பருத்திவீரன் படத்தின் மூலம் கார்த்தி அறிமுகமானார். இதை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் மற்றும் பையா படங்களில் நடித்து இருந்தார்.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் விஷயத்தில் கண்ணதாசனை எச்சரித்த சோ… கவிஞரையே மன்னிப்பு கேட்க வைத்ததுதான் ஹைலைட்…
இரண்டு படமுமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படங்களை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியான எல்லா படங்களுமே மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை. அதிலும் ராஜுமுருகன் இயக்கத்தில் கடைசியாக அவர் நடித்த ஜப்பான் திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது.
இதனால் புது கதைகள் தனக்கு செட்டாகாது என தோன்றிவிட்டது போல. அவரின் அடுத்தக்கட்ட படங்கள் எல்லாம் இரண்டாம் பாக கதைகள் தானாம். முதலில் சர்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருக்கிறது. நலன் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் 26வது படம் மற்றும் ப்ரேம் குமாருடன் அவர் நடிக்க இருக்கும் ப்ராஜெக்ட் முடிந்தவுடன் இந்த கதையில் நடிக்க இருக்கிறாராம்.
இதையும் படிங்க: எனக்கு ஒன்னும் தர மாட்டீங்களா?!.. எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிய ஒரே பரிசு அதுதான்!..
இப்படத்தினையும் ஹெச்.வினோத் இயக்க இருக்கிறார். இதன் முதற்கட்ட பணிகள் அடுத்த வருடம் நடக்க இருக்கிறது. தலைவர்171 படத்தினை முடித்துவிட்டு கார்த்தியை வைத்து லோகேஷ் கைதி2ஐ இயக்க இருப்பதும் குறிப்பிடத்தக்கது.