தளபதி படத்தை கலாய்க்க போய் வாங்கி கட்டிக்கொள்ளும் கார்த்தி… தேவையா இதெல்லாம்?

#image_title
Karthi: தமிழ் சினிமாவில் வெற்றிபடம் மூலம் உள்ளே வந்தவர் நடிகர் கார்த்தி. ஆனால் சமீபகாலமாக பிளாப் படங்களை கொடுத்து வரும் கார்த்தியின் பேச்சால் ரசிகர்களிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்டு இருக்கிறார்.
பருத்திவீரன் என்னும் வெற்றி படத்தில் நடித்த தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கார்த்தி சிவகுமார். ஆரம்ப காலங்களில் வெற்றி படங்களை கொடுத்து வந்த கார்த்தி தற்போது மிகப் பெரிய பிளாப் ஸ்டார் ஆக தான் இருக்கிறார். அதிலும் அவரின் ஜப்பான் திரைப்பட நிகழ்ச்சியில் நடந்த விஷயம் கோலிவுட்டில் பெரிய சர்ச்சையை கிளப்பியது.
இதையும் படிங்க: வேட்டையன் படத்துக்கு 7500 திரையரங்குகள்… ஆடியோ லாஞ்ச்… ரஜினி சொன்ன தகவல்
இருந்தும் அத்திரைப்படம் மோசமான விமர்சனங்களை குவித்தது. இந்த படத்தில் நடிக்க கார்த்தி எப்படி ஒப்புக்கொண்டார் என்ற கேள்விகளும் எழுந்தது. இந்நிலையில் கார்த்தி தற்போது நடிகர் அரவிந்த்சாமியுடன் இணைந்து மெய்யழகன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படம் விரைவில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. அந்த விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, விளையாட்டாக ஃபைட் வேணுமா ஃபைட் கிடையாது. சாங்கு வேணுமா சாங் கிடையாது. லவ்வு வேணுமா லவ் கிடையாது எனப் பேசினார்.
இதையும் படிங்க: இந்த படத்துல வேறலெவல் விஜயை பார்ப்பீங்க!.. ஹைப் ஏத்தும் வெங்கட்பிரபு!…
ஆனால் அந்த வீடியோ வைரலான நிலையில் இசை வெளியீட்டு விழாவில் இப்படி பேசிய நடிகர் நீங்க ஒருவர்தான். ஆடியோ இல்லாத படத்துக்கு எதுக்கு ஆடியோ விழா எனவும் சரமாரியாக கலாய்த்து வருகின்றனர். இந்த டயலாக் வாரிசு திரைப்பட விழாவில் தயாரிப்பாளர் தில் ராஜூ டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு. ஃபைட்டு வேணுமா ஃபைட்டு இருக்கு எனப் பேசி வைரலாகினார்.
அதை கலாய்க்கும் விதமாக கார்த்தி பேசப்போய் வாங்கிக்கட்டிக்கொண்டு இருக்கிறார். ஜப்பான் படம் மாதிரி ஆகிடாமா பார்த்துக்கோங்க எனவும் பேசிவருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கார்த்தி வீடியோவைக் காண: https://x.com/KavinKfc/status/1830221695648694362