அன்னைக்கே மணிரத்னம் போட்ட திட்டம்..! கார்த்தி- திரிஷா கூட்டணி முதலில் எந்த படம் தெரியுமா....?

by Rohini |   ( Updated:2022-08-16 07:10:41  )
trisha_main_cine
X

கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் விருமன். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அதீதி சங்கர் நடித்திருப்பார். படத்தை சூர்யாவின் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி கலவையான விமர்சனத்திற்கு ஆளாகியது.

trisha1_cine

மேலும் கார்த்தி அமெரிக்காவில் படித்து விட்டு இயக்குனராக வேண்டும் என்பதற்காகவே இந்தியா வந்ததாக கார்த்தியே கூறினார். மேலும் நடிப்பெல்லாம் எனக்கு பிடிக்காது எனவும் கூறியிருக்கிறார். முதன் முதலில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஆய்த எழுத்து படத்தில் துணை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார் கார்த்தி.

trisha2_cine

அந்த படத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த், திரிஷா போன்றோர் நடித்திருப்பர். மேலும் முதலில் சித்தார்த் நடிக்க வேண்டிய கதாபாத்திரத்தில் கார்த்திதான் நடிக்க வேண்டியிருந்ததாம். மணிரத்னத்திடம் போய் சொல்ல மணிரத்னம் கார்த்தியை அழைத்து சூர்யாவின் தம்பி போன்ற கதாபாத்திரம் நடிக்கிறாயா என்று கேட்டாராம்.trisha3_cine

ஆனால் அப்போது கார்த்தி 110 கிலோ வெயிட் இருந்ததனால் தம்பி கதாபாத்திரம் செட் ஆகாது என நினைத்து ஒதுங்கிவிட்டாராம்.இல்லையென்றால் சித்தார்த் கதாபாத்திரத்தில் நடித்து திரிஷாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். ஆனால் அது பொன்னியின் செல்வனில் நிறைவேறியிருக்கிறது.

Next Story