கேஜிஎப் 2 படத்தை பாராட்டிய பிரபல நடிகர்... கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்... ஏன் இந்த கொல வெறி?
கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகி உலகம் முழுவதும் வெளியாகியுள்ள கேஜிஎப் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது யாரும் எதிர்பாராத வகையில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. நாளுக்கு நாள் கேஜிஎப் படத்திற்கான திரையரங்கு எண்ணிக்கைகள் அதிகரித்து கொண்டே செல்கிறது.
பல திரைபிரபலங்கள் இப்படத்தை வெகுவாக பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகரான கார்த்தியும் இப்படத்தை பாராட்டி டிவீட் செய்திருந்தார். அதில் அவர், "கேஜிஎஃப் 2 பெரிதாக கற்பனை செய்து கொண்டிருந்ததை கண்முன்னே தனித்துவமான ஸ்டைலில் பார்க்க வைத்துள்ளதற்கு பெரிய கைதட்டல்கள்.
விஷுவல், டயலாக், ஆக்ஷன் ஆகியன படத்தை மகத்துவமானதாக்கி உள்ளன. தாயின் கனவின் சக்தி என்ன என்பதை திரையில் காட்டி உள்ளனர். மொத்த டீமுக்கும் வாழ்த்துக்கள்" என படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். ஆனால் ஒரு வாழ்த்து கூறியதற்காக கார்த்தியை தற்போது பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
அதாவது முன்னதாக தமிழில் வெளியான வலிமை, பீஸ்ட் படங்களுக்கெல்லாம் வாழ்த்து சொல்லாத கார்த்தி, கேஜிஎஃப் 2 படத்திற்கு மட்டும் வாழ்த்து கூறியுள்ளார். இவர்களை போன்றவர்களால் தான் தமிழ் சினிமா முன்னேறாமல் உள்ளது. இதில் இவருக்கு தமிழ் சினிமா செயலாளர் பொறுப்பு வேறு? என அவரை கண்டமேனிக்கு திட்டி வருகிறார்கள்.
இருப்பினும் சிலர் சினிமாவிற்கு மொழி கிடையாது. நன்றாக இருந்தால் நன்றாக உள்ளது என கூறப்போகிறார்கள். இதில் என்ன தவறு இருக்கு? வெற்றி பெற்ற படத்திற்கு தான் வாழ்த்து கூற முடியும். அதுக்காக தமிழ் சினிமாவுக்கு சப்போர்ட் பண்ணலன்னு பேசாதீங்க என கார்த்திக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார்கள்.