Connect with us

தேசிய விருது என்ன கடைலயா கிடைக்கு..? விருமன் இசை வெளியீட்டு விழாவில் உளறிய பிரபல நடிகர்…!

viru_main_cine

Cinema News

தேசிய விருது என்ன கடைலயா கிடைக்கு..? விருமன் இசை வெளியீட்டு விழாவில் உளறிய பிரபல நடிகர்…!

முத்தையா இயக்கத்தில் 2டி தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் ஆடியோ லாஞ்ச் விழா சில தினங்களுக்கு முன் மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதீ சங்கர் நடிகையாக அறிமுகமாகிறார்.

viru1_cine

மேலும் இந்த படத்தின் விழாவிற்கு திரையுலகை சார்ந்த பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். மதுரையில் நடந்ததால் மண்மனம் மாறாத அளவிற்கு அனைவரும் பாரம்பரிய உடையில் வந்து விழாவை மேலும் சிறப்பித்தனர். தாமதமாக வந்தாலும் அனைவரையும் தன் பக்கம் ஈர்த்தார் நடிகர் சூர்யா.

viru2_cine

விருமன் கார்த்தி படமா? இல்லை சூர்யா படமா? என்று தெரியாத அளவிற்கு ரசிகர்கள் அனைவரும் சூர்யா, ரோலக்ஸ் என கூச்சலிட்டனர். பின் ஒருவர் ஒருவராக மேடையில் ஏறி படத்தில் நடித்த அனுபவங்களை பகிர்ந்தனர். அப்போது நடிகர் கருணாஸ் பேசுகையில் சூர்யா தேசிய விருது வாங்கியதையும் கார்த்தி வாங்க போவதையும் பற்றி பேசினார்.

viru3_cine

விருமன் படத்தில் கடைசி காட்சியில் கார்த்தி பிரகாஷ்ராஜ் நடிப்பில் வரும் சீனுக்கு கண்டிப்பாக கார்த்தி தேசியவிருதை வாங்குவார் என நான் நிச்சயமாக கூறுகிறேன். மிகைப்படுத்தி சொல்வதற்காக இதை சொல்லவில்லை. ஏற்கெனவே சூரறைப் போற்று படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலயே சூர்யாவுக்கு கண்டிப்பாக கிடைக்கும் என சொன்னவன் நான். அதனால் தான் சொல்கிறேன் இவருக்கும் கிடைக்கும் என்று கூறினார்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top