திருமணம் செய்யாமல் அடம்பிடித்த ரசிகர்... கார்த்திக் செய்த அந்த சம்பவம்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-03-10 06:55:43  )
திருமணம் செய்யாமல் அடம்பிடித்த ரசிகர்... கார்த்திக் செய்த அந்த சம்பவம்..!
X

Karthick

வைகாசி பொறந்தாச்சு, பொன்னுமணி என இரு படங்களுமே செம மாஸ் ஹிட். கார்த்திக், பிரசாந்த் படங்களுக்கு 90களில் அவ்வளவு மவுசு. இவர்கள் இருவரில் கார்த்திக் வாழ்க்கையில் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் பற்றிப் பார்ப்போம்.

கார்த்திக் ஒவ்வொரு தடவையும் எலெக்ஷனை ஒட்டி பிரஸ் மீட் வைப்பார். கார்த்திக் நடிக்கும்போது அவரது மேனேஜர் கப்பார். திருநெல்வேலியில் இருந்து ஒரு குடும்பம் அவரைப் பார்க்க அங்கும் இங்கும் அலைந்து கொண்டு இருந்தது. அவரது மேனேஜர் அதைக் கண்டதும் என்ன விஷயம் என்று கேட்டார். எதுவும் உதவி வேணுமான்னு கேட்டார். அதற்கு அவர், ஐயா உதவி எல்லாம் கேட்டு வரல.

என் பையன் கார்த்திக்கோட மிகத் தீவிரமான ரசிகர். 43 வயசாகுது. கல்யாணமே பண்ணிக்கல. இவரு வந்து தாலியை எடுத்துக் கொடுத்தால் தான் கல்யாணமே பண்ணிக்குவேன்னு சொல்றாருன்னு சொல்லிட்டு ஓ ன்னு அழ ஆரம்பிக்குறாங்க.

Ponnumani

Ponnumani

ஓ... அப்படியா... இதென்ன வம்பா போச்சுன்னு... கார்த்திக்கிடம் விவரத்தை சொல்லி சூட்டிங் முடிந்ததும் ஒரு ஓட்டலில் தங்க வைத்து அந்தப் பெற்றோரையும் அழைத்துப் பேச வைத்தார். அவர்கள் அழுது கொண்டே விவரத்தை சொன்னார்கள்.

நான் கல்யாணத்துக்குக் கண்டிப்பா வர்றேன்னு கார்த்திக் சொல்லிட்டாரு. அப்போ தூத்துக்குடிக்கு பிளைட் கிடையாது. மதுரையில இருந்து எட்டயபுரம் காரில் வருகிறார். மண்டபத்தை அடைய முடியவில்லை. அவ்வளவு கூட்டம். காரை முன்னால வரவழைத்து காரின் மேல் ஏறி நின்று கார்த்திக் மணமகனுக்கு தாலியை எடுத்துக் கொடுத்துக் கட்டச் செய்தாராம்.

இதையும் படிங்க...அஜித் அந்த விஷயத்தில் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்!.. ரகசியம் சொன்ன பிரபல காமெடி நடிகர்!..

மணமக்களுக்கான கிப்டைக் கூட காரில் இருந்து எடுக்கமுடியவில்லை. அவ்வளவு கூட்டம். திரும்ப கார்த்திக்கின் கார் மதுரை ஏர்போர்ட் வரும் வரையிலும் 150 பைக்கில் ரசிகர்கள் பின்தொடர்ந்தார்களாம். சினிமாவில் மட்டும் கார்த்திக் அக்கறை செலுத்தி இருந்தால் இப்போ அவரது ரேஞ்சே வேற லெவல் தான். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story