மீண்டும் இணையும் கார்த்திக்-ஜெஸ்ஸி.. அதுவும் இந்த படத்திலா? வேற லெவலில் இருக்குமே!...
Karthick-Jeesy: தமிழ் சினிமாவில் காதல் ஜோடிகளில் முக்கிய இடம் கார்த்திக் மற்றும் ஜெஸ்ஸிக்கானது. அவர்கள் இருவரையும் மீண்டும் ஜோடியாக பார்க்க ரசிகர்களுக்கு எப்போதுமே விருப்பம் உண்டு. தற்போது அந்த ஆசை நடந்து விட்டது.
கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. இப்படத்தில் சிம்பு கார்த்திக் கேரக்டரிலும், திரிஷா ஜெஸ்ஸி கேரக்டரிலும் நடித்திருப்பார். இருவர் காதலித்தாலும் அப்படத்தில் அந்த ஜோடி சேராமல் போய்விடுவார்கள்.
இதையும் படிங்க: விஜயோட பைக் டிரைவர்.. ஒரே பட்டன் அஜித்!.. ஒருத்தர விடாம பங்கம் பண்ணும் புளூசட்ட மாறன்..
ஆனால் ரசிகர்களிடம் அவர்கள் காதல் பெரிய அளவில் ஹிட்டடித்தது. தற்போது, தமிழ் சினிமாவில் நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின்னர் தன்னுடைய இரண்டாம் இன்னிங்ஸில் நடித்து வருகிறார். லியோ, விடாமுயற்சி தொடங்கி தற்போது கமலின் தக் லைஃப் திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நடிக்க இருந்த ஜெயம் ரவி, துல்கர் சல்மான் திடீரென படத்தில் இருந்து விலகினர். அதில் துல்கருக்கு பதில் நடிகர் சிம்புவை ஒப்பந்தம் செய்தனர்.
இதையும் படிங்க: யப்பா… அவரை ஆட வைக்கிறதுக்குள்ள நான் பட்ட பாடு… டான்ஸ் மாஸ்டரையே கதிகலங்க வைத்த அந்த நடிகர் யார்?
ஜெய்சல்மரில் நடக்க இருக்கும் ஷூட்டிங்கில் கமலுடன் திரிஷா, சிம்பு நடிக்க இருக்கின்றனர். அவர்களுடன் நாசர், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரும் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. ராஜஸ்தான் ஷூட்டிங் முடிந்த பின்னர் டெல்லியில் படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.