Cinema History
அப்போ நடிச்சாரே கார்த்திக்… அதுக்கு அப்புறம் என்னாச்சு? இப்படி மிஸ் பண்ணிருக்காரே..!
தமிழ்சினிமா உலகில் 80களில் ‘துருதுரு’வென நடிக்கக்கூடியவர் யார் என்றால் சட்டென்று நமக்கு நவரச நாயகன் கார்த்திக் தான் நினைவுக்கு வருவார். இவரது படங்கள் எல்லாமே பார்ப்பதற்கு உற்சாகமாக இருக்கும்.
துள்ளித் துள்ளி ஓடுவார். ஆடுவார். பாடுவார். காதல் செய்வார். ரசிகர்களை எப்போதும் குதூகலமாக்கிக் கொண்டே இருப்பார். அது தவிர இவர் பேசும் ஸ்டைலும் படு ஸ்பீடாக இருக்கும்.
இதையும் படிங்க… அங்க சுத்தி இங்க சுத்தி கடைசில சிம்புகிட்ட வந்து நிக்குதே! சூடுபிடிக்கும் ஜெயம் ரவி விவாகரத்து பிரச்சினை
அந்தவகையில் இவரது இன்னொரு சிறப்பு என்னவென்றால் எவ்வளவு கடினமான ரோலாக இருந்தாலும் அதை அசால்டாக நடித்து கைதட்டல் பெற்று விடுவார். பாரதிராஜாவின் அறிமுகம் தான். ஆனாலும் முதல் படத்திலேயே முத்திரையைப் பதித்து விட்டார்.
அந்த ‘அலைகள் ஓய்வதில்லை’ இன்று வரை நெஞ்சில் ஓயாமல் அடித்துக் கொண்டு தான் இருக்கிறது. கார்த்திக், ராதா ஜோடி இருவருமே ரொம்பவும் பிரபலமானார்கள். அவர்களுக்குள் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது.
காதல் மட்டுமல்லாமல் சண்டைக்காட்சிகளிலும் தூள் கிளப்பியவர் நடிகர் கார்த்திக். இயக்குனர்கள் ராஜேஷ்வர், ஆர்.வி.உதயகுமார் படங்கள் இவருக்கு புகழைத் தேடித் தந்தன.
கிழக்குவாசல், அமரன் படங்களுக்குப் பிறகு கார்த்திக்கிற்கு ரசிகர்கள் வட்டம் அதிகமானது. அவருக்கு ஒரே ஒரு பிரச்சனை. என்ன என்றால் இரவு நீண்ட நேரம் விழித்து இருப்பார். காலையில் தாமதமாக எழுவார். இதனால் அவரால் சூட்டிங் ரொம்பவே பாதிக்கப்படும்.
படப்பிடிப்புக்குத் தாமதமாக வந்தாலும் எவ்வளவு நேரமானாலும் முடித்து விட்டுத்தான் செல்வார். அந்த வகையில் அவரைக் குறை சொல்ல முடியாது.
எல்லா நடிகர்களும் நடிகர் திலகம் சிவாஜியுடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால் இவரோ அவரது படங்கள் என்றால் தலைதெறிக்க ஓடிவிடுவாராம். காரணம் என்னன்னா அது அந்தப் பிரச்சனை தான். காலையில் எழுந்து சூட்டிங் வரமுடியாது என்பது தான்.
இதையும் படிங்க… நான் யாருனு தெரியும்ல? என்கிட்ட வச்சுக்கிட்டா அவ்ளோதான்.. அடாவடி பண்ணும் விக்னேஷ் சிவன்
அப்படி நாலு தடவை சிவாஜியுடன் நடிக்கக்கூடிய வாய்ப்புகள் வந்த போதும் மறுத்து விட்டாராம் நவரச நாயகன். காலை 7 மணிக்கு சூட்டிங் வர முடியாது. 11மணிக்குத் தான் வருவேன். அதனால் தான் சிவாஜி பட வாய்ப்புகளை மறுத்தேன் என்று என்னிடம் சொன்னார் என இயக்குனர் விக்ரமன் ஒரு பேட்டியில் தெரிவித்தாராம்.
ஆனால் நடிகர் திலகம் சிவாஜியுடன் இணைந்து 1987ல் கார்த்திக் ரகுநாத் இயக்கத்தில் ராஜ மரியாதை என்ற படத்தில் கார்த்திக் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போ நடிச்ச கார்த்திக்கிற்கு அதன்பிறகு என்னாச்சு? இப்படியா பழகுவாரு. நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிச்சிருக்கலாமே.. சிவாஜியோட நடிக்க வாய்ப்பு கிடைக்கறதே பெரிய விஷயம். அதிலும் 4 பட வாய்ப்புகளை மிஸ் பண்ணியிருக்காரே என்பதே ரசிகர்களின் கேள்வியாக உள்ளது.