அந்த வீடியோ மட்டும் பத்தாது.. நிம்மதியில்லாமல் களத்தில் இறங்கிய கார்த்திக்…

Published on: May 17, 2024
---Advertisement---

Karthik: தமிழ் சினிமாவில் சின்ன சின்ன ரோல்கள் மூலம் நல்ல அறிமுகம் பெற்றவர் கார்த்திக் குமார். இவர் முன்னாள் மனைவி சுசித்ரா தற்போது இவர் தூக்கத்தினை கெடுத்த சம்பவம் தற்போது தொடங்கி சிறப்பாக நடந்து வருகிறது. இதில் கார்த்திக்கும் களத்தில் இறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

பிரபலங்களின் அந்தரங்க புகைப்படங்கள்  திடீரென பாடகி சுசித்ராவின் ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியாகியது. இது தனக்கு தெரியாமல் நடந்ததாக சுசித்ரா கூறினாலும் அவர் கணவர் கார்த்திக் இதற்கு நேர்மாறான பதிலை வெளியிட்டார். அதாவது சுசித்ராவுக்கு மனநல பிரச்சினை இருப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதையும் படிங்க: புதுப்பாடகர்களுக்கு ‘நோ’ சொன்ன இளையராஜா!.. ஜானகிக்கு மட்டும் அதிக வாய்ப்பு கொடுத்தது ஏன்?..

அடுத்து சில மாதங்களில் இந்த ஜோடி முறையாக விவாகரத்து வாங்கி பிரிந்தனர். சுசித்ரா தன்னுடைய பள்ளிக்கால நண்பரையும், கார்த்திக் தன்னைவிட 16 வயது குறைந்த நடிகையான அமிர்தாவை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த வாரம் சுசித்ரா ஒரு பேட்டியை கொடுத்திருந்தார்.

அதில் பல பிரபலங்களை குறித்து ரகசியங்கள் என்ற பெயரில் நிறைய விஷயங்களை வெளியிட்டு இருந்தார். இதில் தன்னுடைய முன்னாள் கணவர் நடிகர் கார்த்திக் ஹோமோ செக்ஸுவல் என்றும் அவர் தனுஷ் உடன் அறையில் இருந்தது தனக்கு தெரியும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலானது.

இதையும் படிங்க: பல லட்சமா இருந்தாலும் தேவையில்லை!.. பைக் ஓட்டுவதில் அஜித்துக்கு இப்படி ஒரு செண்டிமெண்டா?!..

இதனைத் தொடர்ந்து நடிகர் கார்த்திக் நான் கேவாக இருந்தால் அதை பெருமையாக சொல்லி இருப்பேன். எனக்கு அதில் எந்த சங்கடமும் இல்லை என தெளிவாக வீடியோ வெளியிட்டு இருந்தார். இருந்தும் சுசித்ரா தொடர்ச்சியாக பல வீடியோ பேட்டிகள் கொடுத்து வருகிறார். தற்போது கோலிவுட்டின் டாப் த டாப்பிக்காக இது மாறி இருக்கிறது. வீடியோ மட்டும் போதாத வகையில் தற்போது கார்த்திக் இந்த பிரச்சினையை சட்டரீதியாக கொண்டு போக முடிவு செய்திருப்பதாக தகவல்கள் தெரிகிறது.

பாடகி சுசித்ரா தன்னைக் குறித்து அவதூறாக பேசியதாகவும் அதற்கு உடனே அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் கோர்ட் நோட்டீசை அவருக்கு அனுப்பி இருக்கிறார். மேலும் தன்னைக் குறித்து சுசித்ரா பேசியதை தீர விசாரிக்காமல் வெளியிட்ட youtube சேனல் உடனே அந்த வீடியோவை நீக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை தெரிவித்திருக்கிறார். மற்ற பிரபலங்கள் அமைதியாக இருக்கும்போது கார்த்திக்கை மட்டும் வைத்து காய் நகர்த்துவதாகவும் ஒரு பேச்சு அடிப்பட துவங்கியிருக்கிறது.

Akhilan

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.