32 வருடங்களைக் கடந்தும் ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்து நிற்கும் கிழக்கு வாசல் - ஒரு பார்வை

by sankaran v |   ( Updated:2022-11-14 09:32:54  )
32 வருடங்களைக் கடந்தும் ரசிகர்களின் நெஞ்சில் நிலைத்து நிற்கும் கிழக்கு வாசல் - ஒரு பார்வை
X

Kilakku vasal2

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க 1990ல் ஆர்.வி.உதயகுமாரின் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் படம் கிழக்கு வாசல். கார்த்திக், ரேவதி, குஷ்பூ, சுலக்ஷனா, சின்னி ஜெயந்த், தியாகு, மனோரமா, விஜயகுமார், ஜனகராஜ், கல்லாப்பெட்டி சிங்காரம் உள்பட பலர் நடித்துள்ளனர்.

இந்தப்படமானது சென்னை உள்பட பல நகரங்களில் 100 நாள்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. சென்னையில் 150 நாள்களைக் கடந்து ஓடி மாபெரும் வெற்றிபெற்றது. படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் என்னவென்றால் தரமான கதை தான்.

Kilakku vasal

ரசிகனைத் திரையரங்கிற்கு இழுக்க வேண்டும் என்றால் தயாரிப்பாளர்கள் கொடுக்க வேண்டிய ஒரே யுக்தி இதுதான். கதை தரமாக இருக்க வேண்டும். அந்த வகையில் இது ஒரு முக்கோண காதல் கதை. புதுமையாகப் பின்னப்பட்டது தான் படத்தின் பிளஸ்.

மாநில அளவில் பல விருதுகளை வாரிக் குவித்தது. படத்தின் கதையைக் கேட்டாலே படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விடும்.

தெருக்கூத்து கட்டி பிழைப்பு நடத்தும் நாயகன், அவனை விரும்பும் பக்கத்து ஊர் பண்ணையார் மகள். உள்ளூர் பண்ணையாருக்கு சின்ன வீடாக வந்து அவருக்கு உடன்படாமல் தன்னைக் காத்து வாழும் அநாதை நாயகி. அவர் தான் ரேவதி. தெருக்கூத்து கலைஞனாக வருபவர் கார்த்திக்.

Karthick in Kilakku vasal

இப்போது நாயகிக்கும், நாயகனுக்கும் காதல் மலர்கிறது. அது புனிதமான காதல். கடைசியில் நாயகனும், நாயகியும் ஒன்று சேர்கின்றனர். தெலுங்கில் இந்தப்படம் சித்தூரம் என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டது. இந்தி மற்றும் கன்னடத்திலும் படம் டப் செய்யப்பட்டு வெளியானது.

Revathi

இளையராஜாவின் இன்னிசை படத்தின் ஓட்டத்தையும், திரைக்கதையின் சுவாரசியத்தையும் வேகம் குறையாமல் பார்த்துக் கொண்டது. வந்ததே ஓ குங்குமம் என்ற பாடலை பாடிய பாடகி சித்ராவிற்கு சிறந்த பின்னணிப் பாடகிக்கான தமிழக அரசின் விருது கிடைத்தது. அட வீட்டுக்கு வீட்டுக்கு, பச்சைமலை பூவு, தலுக்கி தலுக்கி, பாடிப் பறந்த கிளி, வந்ததே குங்குமம் ஆகிய சூப்பர்ஹிட் பாடல்கள் இந்தப்படத்தில் தான் உள்ளன.

நம்மை படத்தின் ஆரம்பக்காட்சி முதல் இறுதி காட்சி வரை காட்சிளின் ஊடாகவே பயணிக்க வைத்துள்ளார் இயக்குனர் ஆர்.வி.உதயகுமார். இதுவே இந்தப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு அடித்தளமானது.

நவரச நாயகன் கார்த்திக் படத்தில் பொன்னுரங்கமாக வாழ்ந்துள்ளார். அதனால் அவரது நடிப்பு அபாரமாக உள்ளது. அதே போல் தாயம்மாவாக வரும் ரேவதிக்கும் அவருக்கும் இடையே உள்ள கெமிஸ்ட்ரி நல்லா ஒர்க் அவுட்டாகியுள்ளது.

நவரச நாயகன் கார்த்திக்கிற்கு திரையுலக வாழ்க்கையில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம். படம் வெளியான தேதி 12.07.1990

Next Story