Cinema History
நவரச நாயகன் கார்த்திக் நடித்த வெள்ளி விழா படங்கள்… இவருக்கு மாதிரி யாருக்கும் அமையல!..
எந்த ஒரு நடிகனுக்கும் முதல் படம் வெள்ளி விழா படமாக அமையாது. ஆனால் நவரச நாயகன் கார்த்திக்கிற்கு முதல் படமே 200 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. அவரது நடிப்பில் ஜொலித்த வெள்ளி விழா படங்கள் என்னென்ன என்று பார்ப்போமா…
1981ல் வெளியான அலைகள் ஓய்வதில்லை. இந்தப் படத்தை பாரதிராஜா இயக்கியுள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். கார்த்திக், ராதா இருவரும் அறிமுகம். தியாகராஜன், சில்க் உள்பட பலர் நடித்துள்ளனர். இது வெள்ளி விழா படம்.
1986ல் வெளியான மௌனராகம். மணிரத்னம் இயக்க, இளையராஜா இசை அமைத்துள்ளார். கார்த்திக், மோகன், ரேவதி உள்பட பலர் நடித்துள்ளனர். இது 250 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது. 1988ல் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்திக், பிரபு, அமலா, நிரோஷா நடித்த படம் அக்னி நட்சத்திரம். இது ஒரு வெள்ளி விழா படம்.
இதையும் படிங்க… நெப்போலியனை தொடர்ந்து அருண்பாண்டியன் கிட்டயும் வம்பு பண்ண விஜய்! அவரே சொல்றார் பாருங்க
1990ல் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் கார்த்திக், ரேவதி, குஷ்பு இயக்கிய படம் கிழக்கு வாசல். இந்தப் படத்திற்கு கார்த்திக், ரேவதி இருவருக்கும் பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. வெள்ளி விழா கண்டது.
1996ல் வெளியான படம் சுந்தர்.சி.யின் இயக்கத்தில் வெளியான உள்ளத்தை அள்ளித் தா. கார்த்திக், ரம்பா, கவுண்டமணி, மணிவண்ணன் உள்பட பலர் நடித்துள்ளனர். இது காமெடி கலந்த சூப்பர்ஹிட் படம். வெள்ளி விழா கண்டது. 200 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது.
1998ல் விக்ரமன் இயக்கத்தில் வெளியான படம் உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன். கார்த்திக், அஜீத் உள்பட பலர் நடித்துள்ளனர். இதுவும் வெள்ளி விழா படம். 1989ல் பாசில் இயக்கத்தில் வெளியான படம் வருஷம் 16. பிலிம் பேர் விருது பெற்றது. கார்த்திக், குஷ்பு உள்பட பலர் நடித்துள்ளனர். இதுவும் வெள்ளி விழா தான்.
1991ல் பிரியதர்ஷன் இயக்கத்தில் கார்த்திக், பானுப்பிரியா நடித்த படம் கோபுர வாசலிலே. இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர். வெள்ளி விழா கண்டது.
1993ல் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் கார்த்திக், சௌந்தர்யா நடித்த படம் பொன்னுமணி. இளையராஜாவின் இசையில் பாடல்கள் சூப்பர். இதுவும் வெள்ளி விழா தான். 1990ல் என்எஸ்.கே.விஸ்வநாதன் இயக்கிய பெரிய வீட்டுப்பண்ணக்காரன். கார்த்திக், கனகா உள்பட பலர் நடித்துள்ளனர். 1998ல் செல்வா இயக்கத்தில் வெளியான நவரச நாயகன் படம். கார்த்திக், அப்பாஸ், கௌசல்யா உள்பட பலர் நடித்த படம் பூவேலி. இதுவும் வெள்ளி விழா படம் தானாம்.